சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைக்காயின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைக்காய் ரொம்பவே நல்லது அவர்கள் தயக்கமின்றி தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் வாழைக்காயில் மாவுச்சத்து அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் உள்ளன. இது தவிர இதில் ஸ்டார்ச் எதிர்ப்பும் உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்க பெரிதும் உதவுகிறது. இதனால் தான் சர்க்கரை நோயாளிகள் வாழைக்காய் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி இப்போது சர்க்கரை நோயாளிகள் வாழைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கிளைசெமிக் இன்டெக்ஸ் :

வாழைக்காயில் கிளசமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். ஆனால் வாழைக்காயில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளதால் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நீரில் நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை A1C பரிசோதனை செய்து டயட் முறையை குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

நார்ச்சத்து :

வாழைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படும். இது தவிர இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் பசியை கட்டுப்படுத்தும் உணவில் நார்ச்சத்து உணவுகளின் பட்டியலில் வாழைக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியத்திற்கு

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு உயரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்சனை அதிகமாக வரும். ஆகவே இவர்கள் வாழைக்காயை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைகள் வருவதை சுலபமாக தடுத்து விடலாம். ஏனெனில் வாழைக்காயில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றும். இதுதவிர, உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த வாழைக்காய் உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லது :

வயிற்று பிரச்சினைகளை தடுக்க வாழைக்காய் உதவுகிறது. செரிமானம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை இது மிகவும் நன்மை பயக்கும். வாழைக்காயில் இருக்கும் ஃப்ரீ டயாபடிக்ஸ் குடல் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் வயிற்று ஆரோக்கியத்திற்கு வாழைக்காய் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின்கள் :

வாழைக்காயில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி சர்க்கரை நோயாளிகளின் உடம்புக்கு ரொம்பவே நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உடலை ஃப்ரீ ரேடிக்கல்லில் இருந்து காப்பாற்றும். இதில் இருக்கும் வைட்டமின் பி6 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை எப்படி சாப்பிடணும்?

சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை எப்போதும் போல சமைத்து சாப்பிடலாம். ஆனால் நீங்கள் வாழைக்காயை பொரித்து சாப்பிடும் போது அதில் நிறைய எண்ணெய் சேர்க்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக வாய்ப்பு உள்ளன. ஆகவே பொரிப்பதற்கு பதிலாக அதை சுட்டு சாப்பிடுங்கள்.

பக்க விளைவுகள் உண்டா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழக்காய் நல்லது என்றாலும், அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் அளவோடு சாப்பிடுங்கள். அதுமட்டுமின்றி அதில் கலோரிகள் நிறைந்துள்ளதால் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆகவே இதை நீங்கள் உங்களது உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே நன்மை பயக்கும்.