Increase hair grow and avoid whitening with curry leaves
1.. கறிவேப்பிலை டானிக்
நற்பதமான கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும். தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதனுடன் கறிவேப்பிலை சேரும் போது, முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பு நிறம் அதிகம் காணும் வரை, இந்த இரண்டையும் கொதிக்க விடவும். அதன் பின், அது குளிர்ந்த பின்னர், அதனை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் நேரடியாக தடவிக் கொள்ளவும்.
ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு கழுவுங்கள்.
இந்த டானிக்கை வாரம் இருமுறை பயன்படுத்தினால், வெறும் 15 நாட்களிலேயே நீங்கள் மாற்றத்தை காணலாம். இந்த முடி டானிக் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, முடி நரைப்பதையும் தடுக்கும்.
2.. முடி மாஸ்க்
கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை பேஸ்ட்டை தயிருடன் கலந்து, முடியின் மீது மசாஜ் செய்யவும். இந்த கலவையை 20-25 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள்.
பின் மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். இந்த மாஸ்க்கை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சியில் உடனடி பலனை காணலாம். முடி வளர்ச்சி போக, உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் இது மாற்றும்.
3.. கறிவேப்பிலை தேநீர்
கறிவேப்பிலையை கொண்டு உங்கள் முடிக்காக தேநீர் தயாரிக்கலாம். கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரையையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்த தேநீரை ஒரு வார காலத்திற்கு, தினமும் குடித்து, அதனால் கிடைக்கும் பலனை பாருங்கள். உங்கள் முடி வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிக்கும். அதோடு நில்லாமல் முடியை பளபளப்பாகவும் மின்னவும் வைக்கும். கூடுதலாக முடி நரைப்பதையும் தடுக்கும்.
