save you from implamation yellow cow

பசு மஞ்சள் வைத்தியம் என்பது, உங்கள் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து உங்களை ஆரோக்கிய வாழ்வில் பயணிக்க வைக்கும் மிக முக்கியமான ஒரு முறையாகும்.

இவ்வளவு நாட்களாக அரிசி, கோதுமை என உண்டு வரும் உங்களுக்கு இன்ப்ளமேஷன் இல்லை என்றால் மிகவும் நன்று.

ஆனால் பெரிய குழுமத்தில் / சர்க்கரை நோய்க்கான சிறப்பு குழுமத்தில் காணும் பெரும்பாலான மருத்துவ பரிசோதனை முடிவுகளில் உள்காயத்தை கண்டு உணரும் கெச்.எஸ்.சி.ஆர்.பி (HsCRP) எனப்படும் எண்கள் மிக அதிகமாகவே உள்ளன.

இந்த எண்களை நார்மலாக்க மிக எளிய வைத்தியம் உள்ளது. அது தான் பசு மஞ்சள் வைத்தியம்.

பெரிய செலவாகாத இந்த பசு மஞ்சள் வைத்தியத்தை மிகப்பெரிய மருத்துவமனைகளிலும் இப்போது ஆங்கில / அறிவியல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நம்ம ஊரில் கிடைக்கும் மஞ்சளை அமெரிக்க மருத்துவர்கள் எவ்வளவு மதிப்புடன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

நீங்களும் இந்த பசு மஞ்சளை உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தி பலன் அடையுங்கள். வருங்காலத்தில் நீங்கள் முழு உடல் பரிசோதனை எடுக்கும்போது நீங்கள் ஏற்கனவே பசு மஞ்சள் வைத்தியம் செய்து கொண்டிருந்தால் உங்கள் உள்காயங்கள் / இன்ப்ளமேஷன் குறைவாகவே இருப்பதை காண்பீர்கள்..

இந்த பசு மஞ்சள் வைத்தியத்துக்கு மாதம் 1 கிலோ பசு மஞ்சள், 100 கிராம் மிளகு, 100 கிராம் பூண்டு, கால் கிலோ சின்ன வெங்காயம், இது தான் செலவு.

ஒரு 150 ரூபாய்க்குள் முடித்துவிடலாம். ஆனால் இதன் பயனோ மிக மிக அதிகம்.

ஒரு துண்டு பசு மஞ்சள் (பசு மஞ்சள் என்பது நீங்கள் பொங்கல் அன்று படைக்க பயன்படுத்துவீர்களே அது தான். பசு மஞ்சள் கிடைக்கவில்லை என்றால் ஆர்கானிக் மஞ்சள் பொடி, அதுவும் இல்லை என்றால் சாதாரண மஞ்சள் பொடி), ஒரு பல் பூண்டு, எட்டு குறு மிளகு, ஒரு சின்ன வெங்காயம், ஒரு துளசி இலை. இவற்றை இடித்தோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்.

கொழுப்பு நிறைந்த உணவுக்கு பின் எடுத்தால் நன்று. இது பாட்டி வைத்தியம் மாதிரி இருக்கிறதே என எண்ண வேண்டாம்.

இது அறிவியல் மருத்துவமே!! நிரூபிக்கப்பட்ட எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது!!

இது உபயோகப்படுத்தி, நிரூபிக்கப்பட்ட ஒரு முறை. பயன் அடையுங்கள்.