If you use curry leaves hair loss will decrease ..

கறிவேப்பிலை 

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகை செடிகளில் இதுவும் ஒன்றாகும். நம் உணவுகளில் வாசனையை ஏற்படுத்தவும். சுவையை கூட்டவும் கறிவேப்பில்லை உதவுகிறது. 

அதேநேரம், அவற்றில் பல விதமான மருத்துவ பயன்களும் உண்டு. அவையாவன:

** கறிவேப்பிலை வயிற்றுப்போக்கை தடுக்கும். அவை செரிமான அமைப்பிற்கு நல்லது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் கூட அது உதவுகிறது. இப்படி இதன் பயன்கள் ஏராளம். 

அதுமட்டுமின்றி நம் முடியின் வளர்ச்சிக்கும் கூட கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. 

ஆம்...

1.. பாதிப்படைந்துள்ள முடியின் வேர்களை சீர் செய்யும் 

ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம். பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்கு காரணம், அதிலுள்ள அதிமுக்கிய ஊட்டச்சத்துகள். இவை முடிக்கு நல்லதை அளிக்கும்.

கறிவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர் செய்யும். மேலும் மயிர்த்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். அதன் சுவையினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் அதனை அப்படியே உண்ணவும் செய்யலாம். பாதிக்கப்பட்ட முடிக்கு முதலுதவியாக செயல்படும் கறிவேப்பிலை. முடியின் வேர்கள் வலுவடைந்து விட்டால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்

2.. முடி கொட்டுதல் குறையும் 

கறிவேப்பிலையில் புரதமும் பீட்டா-கரோடினும் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். புரதச்சத்து குறைபாட்டினால் கூட முடி உதிர்வு ஏற்படலாம். அதனால், கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். 

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது. அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.