Asianet News TamilAsianet News Tamil

நாள்தோறும் இந்த விஷயங்களை பின்பற்றினால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்…

If you follow these things every day you can stay healthy for a long time ..
If you follow these things every day you can stay healthy for a long time ...
Author
First Published Feb 28, 2018, 2:18 PM IST



வாழ்க்கையில் எல்லாருக்கும் நல்ல ஆரோக்கியம், நல்ல உணவு, நல்ல உறவுகள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் நாம் உழைத்தால். நல்ல உணவு உண்டால் போதும். 

நாள்தோறும் இந்த விஷயங்களை பின்பற்றினால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்…

** எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் சீரியசாக எடுத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். அமைதியாக அமர்ந்து யோசித்தால் கடினமான விஷயங்களுக்கு கூட எளிய தீர்வு கிடைக்கும்.

** தினமும் கொஞ்ச நேரமாவது வயதானவர்கள், சிரியவர்களுடன் செலவழித்து வாருங்கள். இது நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் பயனளிக்கும்.

** வேலை, வேலை என வேலையை கட்டிக்கொண்டு அழவேண்டாம். உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உறவும், நட்பும் தான் வருமே தவிர வேலை அல்ல

** தினமும் 10 – 30 நிமிடங்கள் ஜாக்கிங் அல்லது, ஒரு மணிநேரம் வாக்கிங் செல்லுங்கள்.

** உங்கள் கடந்த காலம் நிகழ் காலத்தையும், நிகழ் காலம் கடந்த காலத்தையும் பாதிக்கும் படி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.

** மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எண்ணி கவலைப்பட வேண்டாம்.

** தினமும் பத்து நிமிடமாவது அமைதியான இடத்தில் உட்கார்ந்திருங்கள். நல்ல உடல் நலனுக்கு இது உதவும்.

** மற்றவரை பற்றி கிசுகிசு, புரளி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

** கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய கனவு காணுங்கள்.

** மற்றவருடன் தொழில் சார்ந்து, இல்லறம் சார்ந்து உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய பாதையும் வெவ்வேறானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

** இறைச்சியை காட்டிலும் அதிகம் காய்கறி, பழங்கள் உட்கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் உணவுகள் உட்கொள்வது சிறந்தது.

** தினமும் சிறிது நேரம் சிரித்து பேசுங்கள், மூன்று பேரையாவது சிரிக்க வையுங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios