Bone fracture: இந்தப் பழத்தை சாப்பிட்டால் எலும்பு முறிவே வராதாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு!
பலருக்கும் வயதாகி விட்டால் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
நம் வயது கூடிக் கொண்டே செல்கையில், நம் ஆரோக்கியமும் கூடிக் கொண்டே சென்றால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், வயதாக வயதாக நோய்கள் தானாகவே வந்து விடுகிறது. பலருக்கும் வயதாகி விட்டால் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் 40 வயதைக் கடந்த அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்நோய்க்கான தீர்வு பழங்களில் தான் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அது எந்தப் பழம் என்பதைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை
சமீபத்தில் நடந்து முடிந்த ஆய்வில், உலர் பிளம்ஸ் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு நோய் வராது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினசரி 5 முதல் 6 பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமை குறையும் தருவாயில், உடலில் வீக்கம் ஏற்படுகிறது. உலர் பிளம்ஸ் பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கூறுகள் இருக்கிறது என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இனி பெட் காஃபி வேண்டாம்... பட்டர் காஃபி குடிங்க! - நன்மையும் ஏராளம்! சுறுசுறுப்பும் தாராளம்!
எலும்பு முறிவை குணப்படுத்த
50 வயதை கடந்த பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், பக்கவாதம் மற்றும் மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் குறிப்பாக இடுப்பு எலும்பு முறிவு, ஒருவரது வாழ்வினை முற்றிலுமாக புரட்டி போட்டு விடும். இந்த ஆய்வானது மாதவிடாய் நின்றுபோன 50 வயதுகுற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தினமும் 5 முதல் 6 உலர் பிளம்ஸ் சாப்பிட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தினந்தோறும் 5 முதல் 6 பிளம்ஸ் பழங்களே போதுமானது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. நம் உடலில் ஏற்படும் வியாதிகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் இயற்கையிலேயே பல காய்கறிகளும், பழங்களும் உள்ளது. இனியாவது, பழங்களையும், காய்கறிகளையும் உண்டு நலமோடு வாழ்வோம்.