Here is the natural way of immediate relief for cold trauma ...
சளி, இருமல், தொண்டை கரகரப்பு, வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் தரும் இயற்கை வழி...
தேவையான பொருட்கள்
வெந்நீர் – 400 மில்லி
வாழைப்பழம் – 2
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
** நன்றாக பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசித்து, ஒரு மண் பானையில் போட்டு அதில் வெந்நீரை சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
** பின் வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
உட்கொள்ளும் முறை
** ஒரு நாளுக்கு 400 மில்லி என்று நான்கு வேளைகள் தவறாமல் குடிக்க வேண்டும். மேலும் தினமும் புதியதாக இந்த பானத்தை தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
குறிப்பு
** மசித்த வாழைப்பழத்துடன், வெந்நீர் கலக்கும் போது, சூடாக இருக்கும் அந்த கலவையில் தேனை உடனே கலந்து விடக் கூடாது. ஏனெனில் தேனில் உள்ள சத்துக்கள் முழுவதும் இழந்துவிடக் கூடும்.
சளித் தொல்லையை நீக்கும் வேறு சில பொருட்கள்...
பூண்டு, தக்காளி, வெங்காயம் தீராத சளி தொல்லையா பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகிய மூன்றையும் நன்றாக நசுக்கு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, சூப்பாக சமைத்து குடித்து வந்தால் சளி குறையும்.
வெற்றிலை சாறு வெற்றிலை சாறை கொதிக்க வைத்து, பிறகு இதமாக ஆற வைத்து, நெற்றியில் பற்றுப்போட்டால் தீராத சளியும் குணமாகிவிடும்.
தூதுவளை மற்றும் துளசி தூதுவளை, துளசியிலைச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு சிறிய கப் வீதம் பருகி வந்தால் சளித் தொல்லை குறையும்.
சுக்கு, கொத்தமல்லி சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை இதமான சூட்டில் பருகி வந்தால் சளித் தொல்லைக் குறையும்.
இஞ்சி, துளசி துளசி விதை மற்றும் இஞ்சியை எடுத்து தனித் தனியாக உலர்த்தி பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காணலாம்.
பால், இஞ்சி, செம்பருத்தி இதழ் பாலில் இஞ்சியை நசுக்கிப் போட்டு, அதில் செம்பருத்தி பூவின் ஓர் இதழை சேர்த்து, கொஞ்சம் பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இதமான சூட்டில் பருகி வந்தால் சளித் தொல்லைகள் குறையும்
