Here are the amazing medicinal properties contained in a lonely balm.

ஆலமரத்தில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்

** ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.

** ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

** அதுமட்டுமின்றி காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். 

** இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

** வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

** புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

** மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

** கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

** வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

** ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.

** ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும். ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

** ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

** ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

** ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

** வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.