குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இந்த மன அழுத்தத்தை வெளிப்படுத்தும்.

சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவர்.

சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

இதுபோன்று இருப்பதற்கு காரணங்கள் உண்டு என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவையாவன;

1.. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

2.. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

3.. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

4.. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

5.. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

6.. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்.

எனவே, குழந்தைகள் வெளிப்படுத்துவதை வைத்து அதற்கான காரணங்களை அறிந்து அதை சரிசெய்வது பெற்றோரின் பெரிய கடமை அல்லவா.