Food Poison what to do to escape from the ...

உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதில் அதிகக் கவனத்துடன் இருந்தாலே உணவில் நஞ்சு (ஃபுட் பாய்சன்) பிரச்னையை பெரும்பாலும் தவிக்க முடியும்.

** கைகளை சுத்தமாகக் கழுவலாம். உணவுப் பாத்திரங்கள், சமையல் அறை, கழிவறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.

** காய்ச்சாத பாலை அருந்தவோ, சமையலில் சேர்க்கவோ கூடாது. 

** காய்கனிகள், கீரைகள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகளை நன்றாகக் கழுவிய பின்பு பயன்படுத்துவும். 

** மழைகாலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம். முடியாதவர்கள் வீட்டில் சுகாதரமான முறையில் தயாரித்து, அளவாகச் சாப்பிட வேண்டும். 

** ஈரமான சூழ்நிலையில், பாக்டீரியா வேகமாக பரவும் மற்றும் வளரும். எனவே, எப்போதும் சமையல் அறையை உலர்வாகவைத்திருக்க வேண்டும். 

** பாக்டீரியா கிருமிகள் பெருக்கத்துக்கு தட்பவெப்பநிலை முக்கியக் காரணம். ஐந்து முதல் 60 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் பாக்டீரியா வேகமாகப் பெருக்கம் அடையும். எனவே உணவுப்பொருளை 60 டிகிரி செல்ஷிய‍ஸுக்கு மேல் வெப்பப்படுத்திப் பயன்படுத்தலாம். 

** குளிர்சாதனப்பெட்டியில் நீண்ட நாட்களுக்கு வைத்திருந்த உணவுகளை உண்பதையும் மிக முக்கியமாக தவிர்க்க வேண்டும். 

** சுகாதாரமற்ற இடங்களில் எப்பொழுதும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது. 

** தண்ணீரை எப்பொழுதும் கொதிக்கவைத்து, வடிகட்டி குடிக்கவேண்டும். 

** ஃபாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

** சாப்பிடுவதற்கு முன், பின் கைகளை நன்றாக கழுவுவது மிக முக்கியம். இதனால் நாம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ள உதவும்.