Drink everyday juice juice The size of your health will be at the top ..
தினமும் அறுகம்புல் ஜூஸ் குடித்தால் உங்கள் ஆரோக்கியத்தின் அளவு உச்சத்தில் இருக்கும்...
தினமும் அதிகாலை வேளையில் அறுகம்புல் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
அறுகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் இயற்கை மருந்தாக திகழ்கிறது.
தினமும் அறுகம்புல் ஜூஸ் குடிப்பதால் நாம் அடையும் பலன்கள் இதோ...
நச்சுக் கிருமிகள்
அறுகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனாலேயே நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளை தடுத்திட இயலும்.
நுரையீரல்
அறுகம்புல்லிற்கு நமது நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது. இதனால், நமது உடலில் நுரையீரல் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அறுகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.
இரத்த சர்க்கரை அளவு
அறுகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் அறுகம்புல் ஜூஸ் பருகுவது மிகவும் நல்லது.
செயல்திறன் அதிகரிக்க
அறுகம்புல் நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது, இதனால் நமது மூளை மற்றும் அனைத்து தசைகளும் நன்கு செயல்படுகிறது. ஆகையால் நமது ஒட்டுமொத்த உடலின் செயல்திறனும் அதிகரிக்க அறுகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.
வயிற்று புண்
அறுகம்புல் ஜூஸ் தினமும் பருகவதனால் வயிற்றில் இருக்கம் கிருமிகளும் அழியும் மற்றும் வயிற்று புண்ணும் குணமாகும்.
கர்பப்பை கோளாறுகள்
அறுகம்புல்லில் இருக்கும் குளோரோஃபில்லின் நற்குணம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகிறது.
மலச்சிக்கல்
தினந்தோறும் அதிகாலை அறுகம்புல் ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
சளி குணமாகும்
நுரையீரல் சார்ந்த சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க கூடியது அறுகம்புல் ஜூஸ்
இரத்த அழுத்தம்
அறுகம்புல் ஜூஸ் தினசரி பருகுவதனால் இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும்.
உடல் எடை குறைக்க
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உங்களது உடல் எடையைக் குறைக்க தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அறுகம்புல் ஜூஸ் பருகிவந்தால் உடல் எடை குறையும்.
இரத்தம் அதிகரிக்க
அறுகம்புல் ஜூஸ் பருகுவதனால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும். மற்றும் அறுகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்தம் சுத்தீகரிக்கப்படும்.
உடல் துர்நாற்றம்
நம் உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளால் தான் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அறுகம்புல் ஜூஸ் பருகுவதால் நமது உடலில் உள்ள தீமை விளைவிக்கும் நச்சுக் கிருமிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் நமது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும்.
தொண்டை கரகரப்பு
அறுகம்புல் ஜூஸை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை கரகரப்பு சரியாகும்.
அஜீரணம்
உங்களுக்கு அஜீரண கோளாறு இருந்தால் தினமும் அறுகம்புல் ஜூஸை குடியுங்கள். அறுகம்புல் ஜூஸ் அஜீர்ண கோளாறுகளை குணமடைய செயும்.
நரம்பு தளர்ச்சி
மற்றும் தோல் வியாதி அறுகம்புல்லில் இருக்கும் அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள், நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் சார்ந்த வியாதிகளில் இருந்து குணமடைய பயன்தருகிறது. எனவே, தினசரி அறுகம்புல் ஜூஸை பருகுவதை கடைப்பிடியுங்கள்!
