Does your hand wake up in the legs? It also a dangerous disease ... you know it ...

ஹைபர் ஹைட்ரோசிஸ் 

உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis). இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது. 

உலக மக்கள் தொகையில் 5சதவிகித மக்கள், அதாவது ஏறத்தாழ 3.67 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உடற்செயல்களில் ஒன்று, உடலின் வெப்ப சீராக்கல் ஆகும். இதில் வியர்வை சுரப்பிகளின் பங்கு குறிப்பிடத்தக்கன ஆகும். 

சிலருக்கு இயற்கை விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவில் வியர்க்கும். குறிப்பாக, உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் வியர்வை அதிகமாக, இந்நோயால் வருகிறது. எனவே, உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

சமூகத்தில் சிலர், இத்தகையத் தன்மைகளைப் பெற்றிருப்பவரை, அரவமற்ற மாற்றுத்திறனாளி என்று அழைப்பர். ஏனெனில், கையால் பிடித்துச் செய்யும் வேலைகளைச் செய்யும் பொழுது, ஏற்படும் அதீத உள்ளங்கை வியர்வையால் அவர்களுக்கு, உள்ளங்கைப் பிடிப்பு போதுமான அளவு ஏற்படாமல் போகிறது. 

நோயின் இயல்பு

அளவுக்கு அதிகமான வியர்வைச் சுரப்பு, இந்த நோயினால், ஆண், பெண், பெரியவர், சிறுவர் என வேறுபாடு அற்று மாந்தரில் நிலவுகிறது. 

சாதாரண உடல் வெப்பச் சீராக்கலுக்கு மேலதிகமாக சிலரில் அதிகமான வியர்வை சுரக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு அதிக வியர்வை வெளியேற்றம் உடையோர் உளவியல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்டுகின்றனர். 

அடிப்படையான உள்ளங்கை, பாத கசிவு உடையவர்களில் குறிப்பிட்ட பகுதிகளில் அதாவது உள்ளங்கை, பாதம் மற்றும் கமக்கட்டுப் பகுதிகளில் அதிக வியர்வைச் சுரப்பு காணப்படும். இரு புறமும் பொதுவாக சமாந்தரமாகவே வியர்த்திருக்கும். வாரமொன்றில் ஆகக் குறைந்தது ஒரு தடவையாவது இவ்வாறான வியர்வை அதிசுரப்பு காணப்படும். 

பொதுவாக இவ்வாறான நிலைமை 25 வயதிற்கு முன்னதாகவே ஆரம்பத்திருக்கும். நித்திரையில் இவ்வாறான வியர்வை நிலைமை நிறுத்தப்பட்டிருக்கும். 65 வீதமானவர்களில் குடும்ப அங்கத்தவர் ஒருவர் இவ்வகை நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டிருப்பர்.

இவ்வகை வியர்வை அதிசுரப்பு நிலைமை எல்லா வயதினரிலும் ஏ்படலாமாயினும், பதின்ம பராயத்தினரிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுவர்களில் உள்ளங்கைகள் மற்றும் பாதங்களிலும் பூப்பின் பின் கமக்கட்டுகளிலும் இவ்வாறான வியர்வை அதிசுரப்பு காணப்படுகின்றது. 

ஆண்களை விட பெண்களே சற்று அதிகமாக இந்நிலைமையால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது? 

இவர்களிலும் மற்றையோரைப் போன்றே எண்ணிக்கையில் சமனான அளவு வியர்வைச் சுரப்பிகள் இருப்பினும், அவற்றினால் உருவாக்கப்படும் வியர்வைச் சுரப்பு மற்றையோருடன் ஒப்பிடும் போது அதிகமாகக் காணப்படுவதுடன். 

இவ் வகை அதிக வியர்வை சுரக்கவல்ல வியர்வைச் சுரப்பிகள் உள்ளங்கை, பாதம், கமக்கட்டு பகுதிகளில் செறிந்திருக்கின்றன. இவ்வகை வியர்வைச் சுரபை்பிகள் உலர்காலநிலை, மன அழுத்தம், உடற்பயிற்சி மற்றும் சிகரட், மது பாவனை, உறைப்பான உணவு உண்ணுதல் என்பவற்றின் போது கிட்டத்தட்ட 10 லீட்டர் வரையான வியர்வையைக் கூட சுரக்க முடிவதுண்டு!

இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் அவதியுறுவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்க்க வேண்டும்.

உறைப்பான உணவகள், சிகரட் மதுபானம் பாவித்தல் என்பவற்றையும் தவிர்த்தல் வேண்டும். இயற்கை நாரிலான தளர்வான அடைகளையே அணிவதற்காகத் தெரிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட பாகங்கள் மட்டுமன்றி உடல் முழுவதும் கடுமையாக வியர்க்கும் தன்மை இரவு நேரத்தில் வியர்த்தல், திடீர் நிறை இழப்பு, நெஞ்சுப்படபடப்பு போன்ற நோயறிகுறிகள் இருப்பின் உடனடி வைத்திய ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். 

ஏனேனின் மேற்கூறிய அறிகுறிகள் உடலில் வேறு நோய்களின் தாக்கம் ஏற்பட்டு அந்நோய்த்தாக்கத்தின் விளைவினாலேயே அதிக வியர்வை சுரத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்ப வல்லன. 

அதாவது காசநோய், மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் போது சில வகை மருந்துகளாலும், நீரிழிவு, கேடயச்சுரப்பியின் அதிசுரப்பு நிலை (Hypethyrodism) மற்றும் சில அகஞ்சுரப்பிகளில் ஏற்படும் நோய் நிலைமைகள் (Hyperpituitarism, Phalochromoaytoma) சில வகைப் புற்றுநோய்கள் (Lymphoma) இதய செயலிழப்பு, பதற்றம் (Anxiety) பாரிசவாதம், முண்ணாண் பாதிப்பு ஏற்படல், மாதவிடாய் நிறுத்தம் ஏற்படல் போன்ற நிலைமைகளிலும் அதிகமான வியர்வை சுரத்தல் காணப்படும்.

தீர்வு:

இதுபோன்று உள்ள‍ங்கைகளிலும் உள்ள‍ங்கால்களிலும் சுரக்கும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த‍ ஓரெளிய வழி உண்டு. ஆம் இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண் டியளவு (5மில்லி) ‌தினமு‌ம் 2வேளை குடித்து வர உடல் சூடு தணியு‌ம். இதனா‌ல் அதிகப்படியான வியர்வை க‌ட்டு‌ப்படு‌ம்.