Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா?  தேனில் ஊறவைத்த பூண்டு எப்போது சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்...

Do you know When the garlic is soaked in honey you will get more benefits if you eat ...
Do you know When the garlic is soaked in honey you will get more benefits if you eat ...
Author
First Published Apr 13, 2018, 12:34 PM IST


பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது.  இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். 

தேவையான பொருட்கள்

தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.

தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)

செய்முறை 

பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். 

உட்கொள்ளும் முறை 

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

நன்மைகள் 

** சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது

பின் குறிப்பு

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள வேண்டும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios