Do you know Pumpkin flower has the power to defuse mans anger ...
செம்பருத்திப் பூவின் மருத்துவ நன்மைகள்...
1.. கோபம்...
செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
2.. சூடு தணிய...
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல் – 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.
3.. இதய பாதிப்புகள்...
கல்லீரல், இருதயம், சிறு நீரக வியாதிக்கு செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
4.. ரத்த சோகை...
பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும்
5.. சிறு நீரக பாதிப்பு...
செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்.
