Do you know Eat Beetroot to increase blood red blood cells ...

உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. 

அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் காய்கறி பீட்ரூட். இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும்.

புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பயன் கிடைக்கும். 

பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

** ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். 

** பீட்ரூட்டில் மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆகியவை உள்ளதோடு, நைட்ரேட் அளவும் அதிகமிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.

** தீக்காயங்களுக்கு 

பீட்ரூட் சாறெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீக்காயத்திலன் மீது பூசிவந்தால் புண் விரவில் ஆறும்.

** பொடுகு 

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

** பல் வலிக்கு 

பீட்ரூட் சாறை எடுத்து மூக்கினால் உரிஞ்சுங்கள். அவ்வாறு செய்யும்போது தலைவலி, பல்வலி நீங்கும்.

** சரும அலர்ஜி 

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வந்தால் அரிப்பு நிற்கும். சரும அலர்ஜி விரைவில் குணமாகும்.

** ரத்த விருத்திக்கு 

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

** ஸ்டாமினா அதிகரிக்கும் 

பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.