‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
இதற்கு என்றே உள்ள ‘ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது.
ஒவ்வொருவரும், ‘நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
‘பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது.
உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள்.
No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது.
இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது? ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள்.
கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறதா?
பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்?
ஏனென்றால் நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம்.
அந்தக் கொழுப்பை கறைக்க, நல்ல கொழுப்பை பயன்படுத்துவதே “பேலியோ டயட்”.
