Diabatic patient Do eat and donot eat
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி…
இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்….
சாப்பிடக்கூடிய உணவு வகைகள்…
காய்களையும், கீரைகளையும் நன்கு சாப்பிடலாம் அதே நேரத்தில் . பீட்ரூட், கேரட் போன்றவற்றை அளவோடு சாப்பிடலாம்.

ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை சாப்பிடலாம்
மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு.

சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்).
டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.
இவற்றை எல்லாம் சர்க்கரை நோயாளிகள் நன்றாக சாப்பிடலாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள் வகைகள்
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய்.
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை.
எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா.

ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள்.

சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.
