Dandruff problem can cure with onion juice
பொடுகு பிரச்சனை பெரும் பிரச்சனை. செதில் செதிலாக தலைச் சருமம் உதிரும். இதனை போக்க பொடுகு ஷாம்புவை போடுவது தவறு. ஏனென்றால் அவை கூந்தலை இன்னும் வறட்சியடையச் செய்து மோசமான விளைவை தரும்.
பொடுகு ஏற்பட வெளிப்புற மற்றும் உட்புற மோசமான ஆரோக்கியமற்ற சூழ் நிலையே காரணமாகும்.
ஹார்மோன் பிரச்சனை, சுகாதாரமில்லாமலிருப்பது, இவையெல்லாம் உட்புற காரணங்கள். உபயோகப்படுத்தும் ஷாம்பு, நீர், கலரிங்க் ஆகிய்வை வெளிப்புற காரணங்கள்.
வெங்காயச் சாறை கொண்டு பொடுகை எப்படி குணமாக்கும் வழிகள்...
1... பாசிப்பயிறுடன் வெங்காயச் சாறு:
பச்சைப் பயிறு பொடி செய்து அதில் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். விரைவில் பலன் தெரியும்.
2.. பீட்ரூட்டுடன் வெங்காயச் சாறு:
பீட்ரூட் பொடுகு சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை சாறெடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள்.
3.. புடலங்காயுடன் வெங்காயச் சாறு:
புடலங்காயை சாறெடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் த்டவி 20 நிமிடம் கழித்து அலசுங்கள். பொடுகை கட்டுப்படுத்தும்.
4.. வெந்தயத்துடன் வெங்காயச் சாறு:
2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு காணாமல் போய்விடும்.
5.. கற்றாழை சாறுடன் வெங்காயச் சாறு:
கற்றாழை ஜெல்லுடன் வெங்காயச் சாறு கலந்து தலைக்கு த்டவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது நல்ல பலனைத் தரும். வாரம் 3 நாட்கள் செய்யலாம்.
