Asianet News TamilAsianet News Tamil

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் - இதோ லிஸ்ட்...

Benefits of drinking water on an empty stomach everyday - Here the list ...
Benefits of drinking water on an empty stomach everyday - Here the list ...
Author
First Published Mar 10, 2018, 12:56 PM IST


காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறை ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதை தான் "வாட்டர் தெரபி" என்கின்றனர்.

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

** நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் சிறிது நேரத்திலேயே சீரான முறையில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.

** தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

** தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

** அதிகாலையில் தினமும் 1 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு பின் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை மூலம் ஏற்படும் தீவிரத்தை வராமல் தடுக்கலாம்.

** வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

** அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios