Asianet News TamilAsianet News Tamil

தினமும் காலை 'இதை' மட்டும் குடிங்க.. நீங்களும் ஸ்லிம்மாக மாறலாம்..நடிகை பவானி ரெட்டியின் ஸ்லிம் ரகசியம் இதோ!

35 வயதிலும் இளமையாகவும், ஃபிட்டாக இருக்கும் சீரியல் நடிகை பவானியின் ஸ்லிம் ரகசியம் இதோ..

actress pavani reddy fitness secrets in tamil mks
Author
First Published Sep 7, 2023, 12:49 PM IST | Last Updated Sep 7, 2023, 12:59 PM IST

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பவானி ரெட்டி. இவர் தனது பிக் பாஸில் கலந்து கொண்ட சமயத்தில் தனது வாழ்க்கையை நடந்த சோகமான விஷயத்தை கூறி ரசிகர்களை அழ வைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் பிக்பாஸ் பிரபலமும், நடன கலைஞருமான அமீரை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் எப்போது என்று இன்னும் தெரியவில்லை. இவருக்கு 35 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவர் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து அவரே கூறியது பற்றி இங்கு பார்க்கலாம்..

இதையும் படிங்க: எடையை குறைத்து ஜம்முனு இருக்கும்  மஞ்சிமா..எடையையும் தாண்டி 'அந்த' பயிற்சியில் ஒளிந்திருக்கும் ரகசியம் இதோ..

Actress Pavani Reddy Fitness Secret:
நடிகை பவானி இளமை இருப்பதற்கும், ஃபிட்டான உடலுக்கு முக்கிய காரணம் 'வெந்நீர்' தான் என்கிறார். வெந்நீர் தான் தனது மிகச் சிறந்த டீடாக்ஸ் டிரிங் என்கிறார் பவானி. 

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பாராம். ஸ்மூதி நட்ஸ் காலையிலும், மதியம் ஒரு கப் அரிசி சாதம், மாலை வேளையில் கிரீன் டீ சூப் மற்றும் இரவில் வேக வைத்த உணவு இவையே இவர் ஆரோக்கியமாக இருக்கவும் இளமையாக இருக்கவும் காரணம். இந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை இவர் தினமும் கடைப்பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆர்யா முதல் வரலக்ஷ்மி சரத்குமார் வரை.. கெத்தாக எடையை குறைத்து சிக்கென்று மாறிய 5 கோலிவுட் நடிகர்கள்!

யோகாவும் தனக்கு பெரிதளவு உதவியது என்று நடிகை பாவனி கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் சூரியன் நமஸ்காரம் செய்வாராம். மற்றும் வாரத்திற்கு 2 முறை ஜிம்முக்கு செல்லும் பழக்கம் இருக்கிறதாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios