Powerful Passport | இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா போது! 195 நாடுகளுக்கு விசா இல்லாம போகலாம்!
உலகின் பவர்புல் பாஸ்போர்ட் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. எப்போதும் போல் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் உலகில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம். குறிப்பாக பாஸ்போர்ட் இல்லாவிட்டால் சொந்த நாட்டை விட்டு எங்கும் வெளியேற முடியாது. ஒரு நாட்டினுள் அனுமதிக்கும் விசாவைக்கூட அந்த நாட்டிற்கு சென்று கூட பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பாஸ்போர்ட் இல்லாவிட்டால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
இந்நிலையில், உலகின் அதிக சக்திவாய்ந்த பவர்புல் பாஸ்போர்ட் குறித்த பட்டியலை (henley passport index 2024) 'ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
முதலிடத்தில் சிங்கப்பூர்
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடந்து முதலிடம் பெற்று வருகிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் உலகில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விசா எடுத்துக்கொள்ளலாம்.
பிரான்ஸ், இத்தாலி
2-ம் இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
அயர்லாந்து, ஆஸ்திரியா
3-ம் இடத்தில் பின்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா, லக்சம்பெர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் சுமார் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த மணப்பெண்!
இங்கிலாந்து, நியூசிலாந்து
4-ம் இடத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும்,
5-ம் இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் உலக வல்லரசான அமெரிக்கா 8-வது இடத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா பாஸ்போர்ட் மூலம் உலகின் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாஸ்போர்ட்
henley passport index 2024-ன் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் நம் இந்தியா 82-ம் இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் நம் அண்டை நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். நம் பக்கத்து தேசமான பாகிஸ்தான், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 100-வது இடத்தில் இருந்து வருகிறது.