Most Expensive Cities 2023.. உலகளாவிய சர்வே.. 9 ஆண்டுகளாக முதலிடத்தில் சிங்கப்பூர் - என்ன காரணம்? Full List!
Expensive Cities : இந்த ஆண்டு உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலிடத்தை ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரம் சிங்கப்பூருடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
Singapore
பொருளாதார உளவுப் பிரிவு (EIU) இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. சரி முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள் குறித்து முதலில் பார்க்கலாம். முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் சூரிச் பிடித்துள்ள நிலையில் 2ம் இடத்தையும் நியூ யார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா ஆகிய நகரங்கள் பங்குபோட்டுக்கொண்டதுள்ளது.
Zurich Switzerland
தொடர்ச்சியாக 5ம் இடத்தில் ஹாங் காங், 6ம் இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ், 7ம் இடத்தில் பாரிஸ் நகரம், 8ம் இடத்தில் டெல் அவிவ் மற்றும் கோபன்ஹேகன் ஆகிய நகரங்கள் பங்கிட்டுள்ளது. டெல் அவிவ் என்பது இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். மேலும் கோபன்ஹேகன் என்பது டென்மார்க் நாட்டின் தலைநகராகும். இறுதியாக 10ம் இடத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரம் உள்ளது.
New York
சரி தொடர்ந்து 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்?
சிங்கப்பூர் கடந்த பதினொரு ஆண்டுகளில், பல வகைகளில் அதிக விலை நிலைகள் காரணமாக அந்த தரவரிசையில் ஒன்பதாவது முறையாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் கார் எண்கள் மீதான கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கு டாக்ஸி கட்டணம் மிக மிக அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடை, மளிகை பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கு மிகவும் விலையுயர்ந்த இடமாக அது திகழ்கிறது.
Geneva Switzerland
மேலும் இந்த 2023ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோவுடன் இணைந்து இந்த ஆண்டு தரவரிசையில் பெரிய நகரங்களில் ஒன்றாக சீன நகரங்கள் நான்கு நகரங்களுடன் (Nanjing, Wuxi, Dalian மற்றும் Beijing) தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளன.