பேட்டரியைத் தானே மாற்றிக்கொள்ளும் ரோபோ! சீனாவின் வெற லெவல் டெக்னாலஜி!
மனித உதவியின்றி பேட்டரியைத் தானே மாற்றிக்கொள்ளும் உலகின் முதல் மனித உருவ ரோபோ ‘வாக்கர் எஸ்2’ (Walker S2) ஐ சீன நிறுவனமான யுபிடெக் ரோபோடிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ரோபோ வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்பட முடியும்.

பேட்டரியை தானே மாற்றிக்கொள்ளும் ரோபோ
மனிதர்களின் உதவி இல்லாமல், தானாகவே பேட்டரியை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட உலகின் முதல் மனித உருவ ரோபோவை (humanoid robot) சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த ரோபோ வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்பட முடியும்.
'வாக்கர் எஸ்2' (Walker S2) ரோபோ
'வாக்கர் எஸ்2' (Walker S2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை, 'யுபிடெக் ரோபோடிக்ஸ்' (UBTECH Robotics) என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. 5 அடி 3 அங்குல உயரம் மற்றும் சுமார் 43 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ, 20-க்கும் மேற்பட்ட மூட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதனால், இது மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட முடியும். மேலும், வைஃபை மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகளும் இதில் உள்ளன.
இரட்டை பேட்டரி அமைப்பு
இந்த ரோபோவில் 48 வோல்ட் லித்தியம் பேட்டரி கொண்ட இரட்டை பேட்டரி அமைப்பு (dual-battery system) உள்ளது. இதன் மூலம், ரோபோ இரண்டு மணி நேரம் நடக்கவோ அல்லது நான்கு மணி நேரம் நிற்கவோ முடியும். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 90 நிமிடங்கள் ஆகும்.
யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இந்த ரோபோ ஒரு தொழிற்சாலையில் தன்னிச்சையாக செயல்படுவது காட்டப்பட்டுள்ளது. 'வாக்கர் எஸ்2' ரோபோ, தொழிற்சாலைகள் அல்லது பொது இடங்கள் போன்ற அமைப்புகளில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், பணிகளை autonomouly செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனம்
2012-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுபிடெக் ரோபோடிக்ஸ், மனித உருவ ரோபோக்கள் மற்றும் ஸ்மார்ட் சேவை ரோபோக்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், "ஒவ்வொரு குடும்பத்திற்கும் புத்திசாலித்தனமான ரோபோக்களை கொண்டு வந்து, அன்றாட வாழ்க்கையை மேலும் வசதியாக மாற்றுவதே" தனது நோக்கம் என்று கூறுகிறது.
மேலும், சிறிய மற்றும் பெரிய டார்க்கு கொண்ட செர்வோ ஆக்சுவேட்டர்களை (servo actuators) பெருமளவில் உற்பத்தி செய்யும் உலகின் சில நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 'வாக்கர்' என்பது சீனாவில் வணிக பயன்பாட்டுக்கு வந்துள்ளன முதல் மனித உருவ ரோபோ என்று அந்நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.