அடுத்த வாரம் முதல் பூமிக்கு 2 நிலவுகள்! சந்திரனுக்குத் துணையாக வரும் மினி மூன்!
விஞ்ஞானிகள் 2024 PT5 என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோளைக் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் இந்த சிறுகோளுக்கு "மினி-மூன்" (குட்டி நிலா) என்றும் பெயரிட்டுள்ளனர்.
Mini moon
அடுத்த வாரம் முதல் பூமிக்கு இரண்டாவது நிலவுகள் இருக்கும். அனைவரும் அறிந்த பூமியின் துணைக்கோளான சந்திரனுடன் மினி மூன் ஒன்றும் பூமியைச் சுற்றிவர உள்ளது.
விஞ்ஞானிகள் 2024 PT5 என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோளைக் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் இந்த சிறுகோளுக்கு "மினி-மூன்" (குட்டி நிலா) என்றும் பெயரிட்டுள்ளனர். இந்தக் குட்டி நிலாவும் பூமியைச் சுற்றி வரும். ஆனால், அது புவிஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டதாகவே இருக்கும்.
Earth
இந்த சிறுகோள் சுமார் 10 மீட்டர் அளவுக்குச் சிறியதாக இருப்பதால் இதை பூமியிலிருந்து பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், மினி மூன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பூமியைச் சுற்றிவரும்.
Double moon for Earth
ஆகஸ்ட் 7ஆம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட 2024 PT5 என்ற சிறுகோள், அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து உருவானது. இது பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறியதும் மீண்டும் அங்கேயே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 PT5 asteroid
ஆராய்ச்சியாளர்கள் கார்லோஸ் டி லா ஃபுவென்டே மார்கோஸ் மற்றும் ரவுல் டி லா ஃபுவென்டே மார்கோஸ் ஆகியோர் இந்த மினி மூன் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். "பூமிக்கு அருகிலுள்ள வான்பொருட்களில் (NEO) இருந்து சில சிறுகோள்களை பூமி தொடர்ந்து தனது சுற்றுப்பாதைக்கு இழுத்து, அவற்றை மினி நிலவுகளாக மாற்றும்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
NASA
நாசாவின் கூற்றுப்படி, பூமிக்கு அருகிலுள்ள வான்பொருள் என்பது சிறுகோள்கள், விண்கற்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையால் இயங்குகின்றன. அவை அவ்வப்போது பூமிக்கு அருகில் வருகின்றன. நாசா பல்லாயிரக்கணக்கான சிறுகோள்களின் இருப்பிடங்கள் மற்றும் சுற்றுப்பாதைகளைக் கண்காணிக்கிறது. அந்ந்த் திட்டத்தில் சுமார் 28,000 வான்பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன.
NEO
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள NEO ஆய்வு மையத்தின் இயக்குனர் பால் சோடாஸ், 2024 PT5 என்பது சந்திரனில் ஏற்பட்ட தாக்கத்தின் ஒரு பகுதி ஆகும். அதாவது, மினி நிலவு முதலில் நமது சந்திரனின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.