- Home
- உலகம்
- Visa : விசாவே இல்லாம பல நாடுகளுக்கு பயணிக்கும் நபர்!! இவருக்கு மட்டும் ரூல்ஸ் இல்லையா? யார் இந்த நபர்?
Visa : விசாவே இல்லாம பல நாடுகளுக்கு பயணிக்கும் நபர்!! இவருக்கு மட்டும் ரூல்ஸ் இல்லையா? யார் இந்த நபர்?
விசாவே இல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு பயணிக்கக் கூடிய சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ள நபரைக் குறித்து இங்கு காணலாம்.

பொதுவாக ஒரு நாட்டின் குடிமகன் அந்த நாட்டின் எல்லையை தாண்டினாலே பாஸ்போர்ட், விசா இருந்தால்தான் சட்டப்பூர்வமாக பயணிக்க முடியும். இந்த விதி எல்லா நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. மன்னர்கள், அரசியல் தலைவர்கள், தூதர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என யாராக இருந்தாலும் இதே விதிதான். ஆனால் இந்த ஆவணங்கள் எதுவும் இல்லாமலே உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஒருவரால் பயணிக்க முடியும். அவரைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
விசாவே இல்லாமல் எந்த நாட்டிற்கும் போகக் கூடிய அந்த ஸ்பெஷல் நபர் போப்பாண்டவர். இவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர். உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரத்தின் தலைவரும் ஆவார். இந்தப் போப் பதவி வகிக்கும்போது மட்டுமே அந்தச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கிறது. இவர்கள் எந்த நாட்டிற்கும் பாஸ்போர்ட் அல்லது விசா கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறப்படுகிறது.
தகவல்களின்படி, வத்திக்கான் நகரத் தலைவராக இருக்கும் போப் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பதவியில் உள்ளவர். எந்த நாட்டிற்கும் விசாயின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட சிறப்புவாய்ந்த பாஸ்போர்ட் இவரிடம் உள்ளது. அண்மையில் காலமான போப் பிரான்சிஸ், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுள்ளார்.
தற்போது போப் அனுபவிக்கும் இந்த சிறப்பு அந்தஸ்து 1929ஆம் ஆண்டு லேட்டரன் ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் வத்திக்கானுக்கு இறையாண்மையை வழங்கியதோடு, போப்பிற்கு முழு இராஜதந்திர விலக்குரிமையையும் வழங்கியுள்ளது. இதுதவிர 1961ஆம் ஆண்டில் வியன்னா மாநாட்டின் ஒரு பகுதியாக கையெழுத்தான சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் போப்பிற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கிறது.
சிறப்பு அந்தஸ்து இருந்தாலும் சில நாடுகள் அதை ஏற்பதில்லை. அரசியல் நிபந்தனைகள் இருக்கின்றன. சீனா, ரஷ்யா உட்பட சில நாடுகள் போப்பின் பயணத்திற்கு அவ்வப்போது அரசியல் நிபந்தனைகளை விதிப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சில நேரங்களில் விசா தேவைப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

