பாபா வங்காவின் உண்மையான பெயர் என்ன? அமானுஷ்ய சக்தி கிடைத்து எப்படி?
Baba Vanga Real Name: பாபா வங்காவைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கு தீர்க்கதரிசன சக்தி எங்கிருந்து கிடைத்தது? அவரது உண்மையான பெயர் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Baba Vanga's Predictions
பல்கேரியாவைச் சேர்ந்த இந்த மர்மப் பெண் பாபா வங்காவின் உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டவ குஷ்டெரோவா. அவர் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் தன் எதிர்காலக் கணிப்புகளுக்காகப் பிரபலமானவர். 12 வயதில் ஒரு பயங்கரமான புயலின்போது பார்வையை இழந்த பிறகு அமானுஷ்ய சக்தியைப் பெற்றதாக அவர் கூறினார்.
Baba Vanga Predictions 2025
'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும், பாபா வாங்காவின் 85% கணிப்புகள் துல்லியமானவை என்று நம்பப்படுகிறது. அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. 2025ஆம் ஆண்டில் "கொடிய போர்கள்" மற்றும் "பேரழிவு" பற்றி அவர் எச்சரித்திருக்கிறார்.
Nostradamus and Baba Vanga
2025ல் நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். ஐரோப்பாவில் 2025ல் இரு நாடுகளுக்கு இடையே ஒரு புதிய போர் வெடிக்கும். ஆனால் அதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Baba Vanga age
பாபா வங்கா எச்சரித்த உலகளாவிய பேரழிவு இது மட்டுமல்ல. அடுத்த ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வரக்கூடும் என்றும் மனதில் நினைப்பதை பிறர் தெரிந்துகொள்ளும் டெலிபதி தொடர்பும் உண்மையாகிவிடும் என்று அவர் கணித்துள்ளார்.
Baba Vanga Powers
1980 இல், பாபா வங்கா ரஷ்ய நகரமான குர்ஸ்கில் ஒரு பயங்கரமான நிகழ்வை முன்னறிவித்தார். பின்னர் ஆகஸ்ட் 2000 இல், அந்த நகரின் அருகே ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் 188 பேர் பலியானார்கள்.
Predictions of Baba Vanga
1989ஆம் ஆண்டிலேயே 9/11 பயங்கரவாத தாக்குதல் பற்றியும் பாபா வங்கா கூறியுள்ளார். “சகோதரர்கள் எஃகு பறவைகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ஓநாய்கள் புதர்களில் ஊளையிடும். அப்பாவி மக்கள் ரத்தம் சிந்த நேரிடும்" என்றார். பாபா வங்கா கூறிய அந்த 'எஃகு பறவைகள்' 2001 இல் 9/11 தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட விமானங்கள்.
Baba Vanga Real Name
44வது அமெரிக்க ஜனாதிபதி முதல் கறுப்பின அதிபராக இருப்பார் என்று அவர் கணித்துள்ளார். அதன்படியே பராக் ஒபாமா 44வது அமெரிக்க அதிபரானார். ஆனால், அவரே கடைசி நபராகவும் இருப்பார் என்றும் கூறினார். டொனால்ட் டிரம்ப் குறித்தும் அவர் ஒரு கணிப்பு செய்துள்ளார்.