மிகக் கொடிய விஷத் தோட்டம்! உயிரைக் குடிக்கும் தாவரங்களுடன் ஒரு சுற்றுலா!
100க்கும் மேற்பட்ட நச்சுத் தாவரங்கள் உள்ள ஒரு விஷத்தோட்டம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிரிட்டனில் உள்ள இந்தத் தோட்டம் பொதுமக்கள் கூடும் சுற்றுலாத்தலமாகவும் உள்ளது!
Most Deadliest Garden
100க்கும் மேற்பட்ட நச்சுத் தாவரங்கள் உள்ள ஒரு விஷத்தோட்டம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்டில் உள்ள அல்ன்விக் கார்டனில் இந்த விஷத் தோட்டம் உள்ளது. இது போதை மற்றும் நச்சுத்தன்மை கொண்ட தாவரங்களால் நிறைந்த இந்தத் தோட்டம் பொதுமக்கள் கூடும் சுற்றுலாத்தலமாகவும் உள்ளது!
"These plants can kill"
இந்தத் தோட்டத்தின் நுழைவு வாயிலிலேயே கருப்பு நிறத்தில் இரும்புக் கதவில் "இங்கிருக்கும் தாவரங்கள் கொலை செய்யும்" என்ற எச்சரிக்கைப் பலகையைக் காணலாம். அதன் அருகில் மண்டை ஓடு படமும் பொறிக்கப்பட்டிருக்கும். இது வேடிக்கையான வைக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல, நிஜமாகவே இதுதான் உலகின் மிகக் கொடிய தோட்டம் ஆகும்.
The Poison Garden
2005 இல் நிறுவப்பட்ட இந்த விஷத் தோட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விஷத் தாவரங்கள் உள்ளன. அவை நச்சு மற்றும் போதைத் தன்மை கொண்ட தாவரங்கள். இந்தத் தோட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு சிறிய பாதுகாப்பு விளக்கம் அளிக்கப்படுகிறது. அவர்கள் எதையும் தொடவோ, சுவைக்கவோ முகர்ந்து பார்க்கவோ கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். இருந்தும்கூட, சிலர் நச்சு வாசனையை சுவாசித்து மயக்கம் அடைந்ததாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
Northumberland Poison Garden
இங்கு பயிரிடப்படும் கொடிய தாவரங்களில் ஒன்று மாங்க்ஸ்ஹூட் (Monkshood). இதில் உள்ள அகோனிடைன், நியூரோடாக்சின், கார்டியோ டாக்சின் ஆகியவை கொடிய விஷத்தன்மை கொண்டவை. மிகவும் நச்சுத்தன்மையுள்ள இன்னொரு தாவரம் ரிசின் (Ricin). இத்தாவரத்தில் ரிசின் என்ற நச்சு உள்ளது.
The Alnwick Garden
பாய்சன் கார்டனில் உள்ள ஒவ்வொரு நச்சுத் தாவரமும் எப்படி உயிரைக் கொல்லும் என்று திட்டவட்டமாகச் எடுத்துச் சொல்ல முடியாது. வெளியில் இருக்கும் எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தே மிரண்டுமானால், இந்தத் தோட்டத்திற்குள் செல்லாமல் இருப்பதே நல்லது. ஆனால், ஒரு தோட்டத்தில் பெரும்பாலான தாவரங்கள் கொல்லும் தன்மை கொண்டவை என்பது மிகவும் சுவாரஸ்யமானது தானே?