- Home
- உலகம்
- டிரம்ப் டோட்டல் சரண்டர்! அமெரிக்கர்களுக்கு டேலண்ட் பத்தாது.. வெளிநாட்டில் இருந்துதான் வரணும்!
டிரம்ப் டோட்டல் சரண்டர்! அமெரிக்கர்களுக்கு டேலண்ட் பத்தாது.. வெளிநாட்டில் இருந்துதான் வரணும்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், H-1B விசா மூலம் திறமைசாலிகளை நாட்டிற்குள் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளார், அமெரிக்காவில் சில திறமைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

H-1B விசா பற்றி டிரம்ப் பேச்சு
அமெரிக்காவிற்குத் திறமைசாலிகளைக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். “நம்மிடம் திறமையானவர்கள் அதிமாக இல்லை," என்றும் "நாம் திறமைசாலிகளை வெளிநாட்டில் இருந்து அழைத்துவர வேண்டும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஃபோக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு பேசியுள்ளார்.
திறமையாளர்களை ஆதரிக்கும் டிரம்ப்
"அமெரிக்கர்களுக்கு ஊதியத்தை உயர்த்த விரும்பினால், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது," என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், "நான் அதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நாம் திறமையானவர்களைக் கொண்டு வரவும் வேண்டும்," என்று கூறினார்
உடனே நேர்காணல் செய்பவர் அமெரிக்காவில் போதுமான திறமையாளர்கள் உள்ளனர் என்று வலியுறுத்தினார். ஆனால் டிரம்ப் உறுதியாக, "இல்லை, நம்மிடம் இல்லை... சில திறமைசாலிகள் நம்மிடம் இல்லை, மக்கள் அந்தத் திறமைகளைக் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
"வேலையில்லாதவர்களை அழைத்து, 'சென்று ஏவுகணைகளை உருவாக்குங்கள்' என்று சொல்ல முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்
உயர் தகுதி உள்ளவர்கள் அவசியம்
முன்னதாக ஜனவரி மாதத்தில், H-1B விசா குறித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப், இந்த விசா திட்டத்தின் மூலம் நாட்டிற்கு மிகவும் திறமையான சிறந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
டெக்னாலஜி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பணியாளர்களைப் பணியமர்த்த, பயன்படுத்தும் விசா தான் H-1B விசா ஆகும்.
விசா கட்டண உயர்வு
டிரம்ப் நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் H-1B விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது. முன்னர் 215 டாலராக (சுமார் 19,000 ரூபாய்) இந்த விசா விண்ணப்பக் கட்டணம் பல மடங்கு உயர்ந்து 100,000 டாலராக (சுமார் 88.6 லட்சம் ரூபாய்) ஆக அதிகரித்தது.
இந்த நடவடிக்கை வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அவர்களைப் பணியமர்த்தி இருக்கும் நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.