MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • தாய்லாந்து சுற்றுலாவுக்குப் போறீங்களா? இதையெல்லாம் மறந்துகூட எடுத்துட்டு போகாதீங்க!

தாய்லாந்து சுற்றுலாவுக்குப் போறீங்களா? இதையெல்லாம் மறந்துகூட எடுத்துட்டு போகாதீங்க!

நீங்கள் இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு பயணம் செய்வதற்கு முன் அந்நாட்டில் உள்ள கட்டுப்பாடுகளைத் தான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தாய்லாந்தின் சுங்க விதிமுறைகள் கடுமையானவை. சில பொருட்களை அந்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்க கூடாது. சில பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்ல முடியாது. தவறுதலாக அனுமதிக்கப்படாத பொருட்களை எடுத்துச் சென்று மாட்டிக்கொண்டால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். கடுமையான அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உண்டு.

2 Min read
SG Balan
Published : Sep 08 2024, 04:41 PM IST| Updated : Sep 08 2024, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Thailand

Thailand

ஆபாசமான பொருள்கள் மற்றும் புத்தகங்களுக்கு தாய்லாந்தில் கண்டிப்பாக அனுமதி இல்லை. ஒரு பத்திரிக்கையாக இருந்தாலும் சரி, சந்தேகத்திற்குரிய வீடியோவாக இருந்தாலும் சரி அதற்கு அனுமதியே கிடையாது. இந்தப் பொருட்களைக் கொண்டுவந்தால், அபராதம், சிறை தண்டனை கூட கிடைக்கும். வந்த வழியே நாடு திரும்பவேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். என தாய்லாந்தின் பழக்கவழக்கங்கள் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

28
Books

Books

தாய்லாந்தின் கொடியை முறையற்ற அல்லது அவமரியாதையாக சித்தரிக்கும் எந்தவொரு பொருளையும் தாய்லாந்திற்குள் எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது. இந்த சட்டத்தை மீறினால், அந்தப் பொருட்கள் பறிமுதல் செயப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தாய்லாந்து அதிகாரிகள் தேசிய சின்னங்கள் மற்றும் கலாச்சார மரியாதையை பாதுகாக்க கண்டிப்பாக செயல்படுத்துகின்றனர்.

38
Drugs

Drugs

மரிஜுவானா, ஓபியம், கோகோயின், மார்பின், ஹெராயின் போன்ற போதைப்பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை மருத்துவரீதியாக பரிந்துரைக்கப்பட்டாலும், அவற்றை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதை தாய்லாந்து தடை செய்துள்ளது. மீறினால் சிறைத்தண்டனை உட்பட கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

48
Currency

Currency

கள்ளப் பணம், பத்திரங்கள் அல்லது நாணயங்களுக்கு தாய்லாந்தில் அனுமதி இல்லை. கள்ள நோட்டுகளை கடத்துவது மோசமான தண்டனைக்கு வழிவகுக்கும். அதிக அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்கப்படும். அங்கு மோசடிகளுகுக எதிராக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே அசல் பணத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள்.

போலியான அரசச் சின்னங்கள், அதிகாரப்பூர்வ முத்திரைகள் தாய்லாந்துக்குள் நுழைய முடியாது. அவற்றை தாய்லாந்து நாட்டிற்குள் கொண்டு வருவது, மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். இந்த விஷயத்தில் தாய்லாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கும்.

58

திருட்டு இசைக் கோப்புகள், குறுந்தகடுகள், வீடியோக்கள் அல்லது கணினி மென்பொருள்கள் போன்ற அறிவுசார் சொத்துரிமையை மீறும் பொருட்களை கொண்டு வருவது தாய்லாந்தில் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த சட்டங்களை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். தாய்லாந்து அதிகாரிகள் பதிப்புரிமைகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக உள்ளனர்.

68

போலி பிராண்ட் முத்திரை கொண்ட பொருட்களை தாய்லாந்திற்குள் எடுத்துச் செல்லவோ அங்கிருந்து வெளியே கொண்டுவரவோ முயற்சி செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். கேஜெட்டாக இருந்தாலும் அதற்கு தாய்லாந்தில் இடமே கிடையாது.

 

78
Guns and Buddha statue

Guns and Buddha statue

தாய்லாந்திற்குள் சில பொருட்களைக் கொண்டு செல்ல அரசு துறைகளின் சிறப்பு அனுமதி தேவை. துப்பாக்கிகள், அவற்றின் பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு தேசிய காவல்துறை அலுவலகத்தின் அனுமதி பெற வேண்டும். புத்தர் படங்கள், கலைப்பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்களுக்கு, நுண்கலைத் துறையின் ஒப்புதல் தேவை. ரேடியோ டிரான்ஸ்ஸீவர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அஞ்சல் மற்றும் தந்தி துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

88
Saplings, Pets

Saplings, Pets

தாவரங்கள் மற்றும் நடவுப் பொருட்களுக்கு வேளாண் துறையின் அங்கீகாரம் தேவை. உயிருள்ள விலங்குகளுக்கு கால்நடை மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாடு உள்ளது. கடைசியாக, மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருட்களுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலகத்தின் அனுமதி தேவை. சிக்கல்களைத் தவிர்க்க நீங்கள் பயணத்திற்கு முன் இதுபற்றிய விதிகளை அறிந்துகொள்ளவும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தாய்லாந்து
பயணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
Recommended image3
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved