'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் இடையே மோதல் வலுத்துள்ளது. ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் விமர்சித்த நிலையில், ஜெலென்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.

'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ரஷ்யா உக்ரைன் போரில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதாவது இந்த போரில் ரஷ்யாவுக்கு எதிராக நின்ற அமெரிக்கா திடீரென அந்நாட்டுடன் கைகோர்த்துள்ளது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளது.
சவூதியில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐரோப்பிய நாடுகளுக்கும், உக்ரைனுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்கா உக்ரைனை நிராகரித்து ரஷ்யாவுவுடன் சேர்ந்துள்ளது உக்ரைன் அதிபர் விளடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய அவர், ''உக்ரைன் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் உக்ரைன் ரஷ்யா போருக்கு தீர்வு காண முடியாது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு வலுவன அமைப்பை உருவாக்க வேண்டும். அமெரிக்கா ரஷ்யா இணைந்து மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்றார்.
டொனால்ட் டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதல்
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளடிமிர் ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''யோசித்துப் பாருங்கள், ஒரு சாதாரணமான வெற்றிகரமான நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவை 350 பில்லியன் டாலர்களை செலவழித்து, வெல்ல முடியாத, ஒருபோதும் தொடங்க வேண்டியிராத ஒரு போருக்குச் செல்லச் சொன்னார். ஆனால் அமெரிக்கா இல்லாமல் டிரம்ப் இல்லாமல் இந்த போரை அவரால் ஒருபோதும் தீர்க்க முடியாது.
இந்த போரில் அமெரிக்கா ஐரோப்பாவை விட 200 பில்லியன் டாலர்களை அதிகமாகச் செலவிட்டுள்ளது, ஐரோப்பாவின் பணம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா எதையும் திரும்பப் பெறாது. இந்த போர் நமக்கு இருப்பதை விட ஐரோப்பாவிற்கு மிகவும் முக்கியமானது. நமக்கு ஒரு பெரிய, அழகான பெருங்கடல் உள்ளது. இதற்கு மேல், நாங்கள் அவருக்கு அனுப்பிய பணத்தில் பாதி "காணவில்லை" என்று ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்கிறார்.
அமெரிக்க கருவூலத்தில் இருந்து தங்கம் காணாமல் போனதா? எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு!!
ரஷ்யா-உக்ரைன் போர்
ஜெலென்ஸ்கி உக்ரைனில் தேர்தல்களை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறர். மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து அவர் போரை நீடித்து நாடகமாடி வந்துள்ளார்.ஜெலென்ஸ்கி வேகமாக நகர்வது நல்லது அல்லது அவருக்கு ஒரு நாடு கூட இருக்கப் போவதில்லை. இதற்கிடையில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாங்கள் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இதை "டிரம்ப்" மற்றும் டிரம்ப் நிர்வாகம் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பைடன் போரை நிறுத்த ஒருபோதும் முயற்சிக்கவில்லை. இதேபோல் ஐரோப்பாவும் அமைதியைக் கொண்டுவரத் தவறிவிட்டது. நான் உக்ரைனை நேசிக்கிறேன். ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு பயங்கரமான வேலையைச் செய்துள்ளார். இந்த போரே தேவையில்லாதது. ஜெலென்ஸ்கியால் உக்ரைன் நொறுங்கியுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தேவையில்லாமல் இறந்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
விளடிமிர் ஜெலென்ஸ்கி
இந்நிலையில், டிரம்ம்பின் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைன் அதிபர் விளடிமிர் ஜெலென்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், ''எங்களை ஆதரிக்கும் அமெரிக்க மக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்ட ஒரு நாட்டின் தலைவராக டொனால்ட் டிரம்ப் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக டிரம்ப் இப்போது தவறான குமிழியில் (ரஷ்யா) சிக்கியுள்ளார்.
டிரம்ப் கூறிய தகவல் ரஷ்யாவில் இருந்து வருகிறது என்பதை புரீந்து கொண்டுள்ளோம். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை. உக்ரைன் இல்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. உக்ரைன் ஒருபோதும் விற்பனைக்கு அல்ல'' என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உயர்ந்த பங்குகள்.. இருந்தாலும் நஷ்டம்! அமெரிக்காவால் ஆட்டம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்