விண்வெளியில் அணிவகுப்பு நடத்தும் 6 கோள்கள்! அபூர்வ வானியல் நிகழ்வு!!
Planet Parade 2025 India: 2025ஆம் ஆண்டின் முதல் அரிய வானியல் நிகழ்வு இன்று இரவு நடக்க உள்ளது. இது ஜனவரி 21 முதல் ஜனவரி 29 வரை தொடரும். இந்த நாட்களில் சூரியக் குடும்பத்தில் உள்ள ஆறு கோள்கள் வரிசையாக நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அரிய காட்சியைக் காணலாம்.
அரிய வானியல் நிகழ்வு:
2025 புத்தாண்டில் சூரியக் குடும்பத்தின் பல கோள்கள் நேர்த்தியான வரிசையில் அணிவகுக்க உள்ளன. வானில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் இந்த அரிய வானியல் நிகழ்வு கோள் அணிவகுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது வானியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.
Planet Parade 2025 India
கோள் அணிவகுப்பு என்றால் என்ன?
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் வானத்தில் ஒன்றுகூடி, பொதுவாக ஒரே பகுதியில், கண்கவர் அமைப்பில் காட்சி அளிப்பது "கோள் அணிவகுப்பு" என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோள்களின் சுற்றுப்பாதைகள் மற்றும் பூமியிலிருந்து பார்க்கும் கோணம் காரணமாக, அவை ஓர் அணிவகுப்பு போலத் தெரியும்.
Celestial Symphony on January 25, 2025
அணிவகுக்கும் ஆறு கோள்கள் எவை?
2025ஆம் ஆண்டில் நிகழும் கோள் அணிவகுப்பு நிகழ்வு என்பது ஒரு தனித்துவமான வானியல் நிகழ்வாகும். இதில் வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் இரவு வானத்தில் ஒரே இடத்தில் அருகருகே காணப்படும்.
Celestial Symphony on January 25, 2025
கோள்கள் அணிவகுப்பின் சிறப்பு என்ன?
அணிவகுக்கும் ஆறு கோள்களில் நான்கு கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது இந்த நிகழ்வின் சிறப்பு அம்சம் ஆகும். அதுமட்டுமின்றி, கோள் அணிவகுப்பு என்பதே மிகவும் அரிதாகக் காணக்கூடியது என்பதால் இந்த வானியல் நிகழ்வு விண்வெளியில் ஆர்வமுள்ளவர்களை கவர்ந்திருக்கிறது.
Celestial Symphony on January 25, 2025
கோள் அணிவகுப்பை எப்படிப் பார்ப்பது?
கோள் அணிவகுப்பைத் தெளிவாகப் பார்க்க, குறைந்த மாசுபாடு உள்ள இடங்களில், வானம் தெளிவாக இருக்கும் பகுதியில் இருக்க இருக்க வேண்டும். இதன் மூலம் எந்த உபகரணமும் இல்லாமல் வெறும் கண்களால் கோள்களின் அணிவகுப்பைப் பார்த்து ரசிக்கலாம்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அல்லது அதிகாலையில் விடிவதற்கு முன் அணிவகுத்து நிற்கும் கிரகங்களைப் பார்க்கலாம். தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பார்த்தால் மேலும் துல்லியமாகக் காண முடியும்.
Celestial Symphony on January 25, 2025
கோள் அணிவகுப்பைப் படம் எடுக்கலாமா?
அனைத்து வானியல் ஆர்வலர்களும் தங்கள் DSLR கேமராக்களை எடுத்துச் சென்று இந்த அரிய தருணத்தைப் படம்பிடிக்கலாம். DSLR கேமரா இல்லாதவர்கள், ஸ்மார்ட்போன் மூலம்கூட கிரகங்களின் அணிவகுப்பைப் போட்டோ எடுக்கலாம்.