பறக்க தடையில்லை! ஆனாலும் விமானங்களை இயக்க பயப்படும் விமானிகள்! எந்த இடம் தெரியுமா?
இந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை இல்லை. ஆனால் அந்த பக்கம் விமானங்கள் செல்வதில்லை. விமானிகள் கூட அந்த பகுதியில் விமானங்களை இயக்க பயப்படுகிறார்கள். விசித்திரமான அந்த பகுதி எது தெரியுமா? இப்போது தெரிந்து கொள்வோம். வாருங்கள்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. நமக்கு விமானத்தில் ஏறுவது ஒரு ஆசை. விமானிகளுக்கு பயணிகளை பத்திரமாக சென்றடைய வைப்பது கடமை. அதனால்தான் விமானிகள் மிகவும் விழிப்புடன் இருந்து விமானத்தை இயக்குகிறார்கள். அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும் விமானிகள் கூட திபெத் பீடபூமியின் மேல் விமானங்களை இயக்க பயப்படுகிறார்கள்.
சீனாவின் எல்லையாக, இந்தியாவிற்கு அருகில் உள்ள திபெத், உலகின் மிக அழகான பகுதிகளில் ஒன்றாகும். திபெத் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. திபெத் பீடபூமியை 'உலகின் கூரை' என்றும் அழைக்கிறார்கள். அதனால்தான் எந்த விமான நிறுவனமும் திபெத்தின் மேல் தங்கள் விமானங்களை இயக்குவதில்லை. அதன் காரணங்கள் ஏன் என இப்போது தெரிந்து கொள்வோம்.
அதிக உயரம் | திபெத் பீடபூமி உலகின் மிக உயரமான பகுதிகளில் ஒன்றாகும். இதன் சராசரி உயரம் சுமார் 4,500 மீட்டர், அதாவது 15,000 அடி. இந்த உயரத்தில் காற்றில் மாசு அதிகமாக இருக்கும். இதனால் விமானங்கள் பறப்பது கடினம்.
குறைந்த காற்று அழுத்தம் | அதிக உயரத்தில் காற்று அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் விமானங்களின் எஞ்சின்கள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். விமான எஞ்சின்கள் திறமையாக செயல்பட காற்று சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.
சுற்றிலும் மலைகள் திபெத் பீடபூமியைச் சுற்றி இமயமலை போன்ற மிகப்பெரிய மலைகள் உள்ளன. இந்த மலைகளின் அருகே விமானங்களைப் பாதுகாப்பாக செலுத்துவது மிகவும் கடினமான பணியாகும். மேலும் வானிலை மாற்றங்கள் இங்கு வேகமாக மாறிவிடும்.
உலகின் மிக உயரமான இடங்களான மவுண்ட் எவரெஸ்ட், கே2 ஆகியவையும் இந்த பகுதியில்தான் உள்ளன. இந்த பகுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் எந்த நேரத்திலும் எஞ்சின் செயலிழக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் விமானங்கள் பறக்க எஞ்சின் இயங்க அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் பறப்பது மிகவும் ஆபத்தானது.
டேக் ஆஃப், லேண்டிங் பிரச்சனைகள் | உயரமான மலைகள் இருப்பதால் விமானங்கள் அவற்றை விட அதிக உயரத்தில் பறக்க வேண்டும். இதனுடன், இங்கு எப்போதும் கடுமையான வானிலை நிலவும். இந்த சூழ்நிலையில், விமானங்கள் மலைகளில் மோதும் வாய்ப்பு உள்ளது.
திபெத்தில் மிகக் குறைவான விமான நிலையங்களே உள்ளன. இருக்கும் சிலவும் உயரமான இடங்களில் இருப்பதால் விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்வது மிகவும் கடினம்.
ஆபத்தான வானிலை | திபெத்தில் வானிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். காற்று, பனிப்புயல், வெப்பநிலை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. விமான போக்குவரத்திற்கு இதுபோன்ற வானிலை மிகவும் ஆபத்தானது.
புவியியல் சவால்கள், கடுமையான வானிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த பகுதி விமானங்கள் பறக்காத மண்டலமாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர் பெற்றுள்ளது.
எசகுபிசகா மாட்டுனா தலையே போயிரும்! இந்த நாடுகளில் சுற்றுலா சட்டங்கள் மிகவும் கடுமையானவை! தெரியுமா?