இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! இறங்கி வரும் பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Pakistan Ready Talks With India
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா கொன்று குவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் இந்தியாவின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க இரு தரப்பு இடையே பெரும் மோதல் உருவானது. இதன்பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை இந்தியா களையெடுத்தது. ஆனால் இந்தியாவில் அப்பாவி மக்களை கொல்லும் பாகிஸ்தான் உலகளவில் நல்லவன் போல் நடித்து கொண்டு வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தும் வரை அந்த நாட்டுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதில் இந்தியா திட்டவட்டவட்டமாக உள்ளது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார். பாகிஸ்தான் அமைதிக்காக ஈடுபடத் தயாராக உள்ளது என்று கூறினார். நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்திற்கு சென்றபோது, இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடியபோது ஷெபாஸ் ஷெரீப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
"அமைதிக்காக (இந்தியாவுடன்) பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார். இந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், காம்ரா விமானப்படை தளத்திற்கு சென்ற ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
காஷ்மீரை சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர், விமானப்படைத் தலைவர், விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஜாகீர் அகமது பாபர் சித்து ஆகியோரும் பிரதமருடன் ராணுவ வீரர்களை சந்தித்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் லடாக் யூனியன் பிரதேசமும் "அதன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கும்" என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.