- Home
- உலகம்
- One Kidney Village: சாப்பாட்டுக்காக கிட்னியை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்... இதுதான் காரணம்!
One Kidney Village: சாப்பாட்டுக்காக கிட்னியை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்... இதுதான் காரணம்!
One Kidney Village: ஆப்கானிஸ்தான்ல 'ஒன் கிட்னி வில்லேஜ்'னு ஒரு கிராமம் இருக்கு. இங்க இருக்குற மக்கள் வறுமை காரணமா தங்களோட ஒரு கிட்னியை வித்துட்டு உயிர் வாழ்றாங்க. இதனைப் பற்றிய முழு தகவல்களைப் பார்க்கலாம்.

கிட்னியை விற்கும் மக்கள்
ஆப்கானிஸ்தான்ல ஹெராத் நகரத்துக்கு வெளிய 'சாய்ஷான்பா பஜார்'னு ஒரு இடம் இருக்கு. அல் ஜசீரா செய்தி நிறுவனம் இந்த இடத்தை 'ஒன் கிட்னி வில்லேஜ்'னு சொல்றாங்க. ஏன்னா, இங்க இருக்குற பல குடும்பங்கள்ல குறைஞ்சது ஒருத்தராவது வறுமை காரணமா தங்களோட கிட்னியை வித்திருக்காங்க. எந்த நோயும் இல்லாம, வெறும் சாப்பாட்டுக்காகவே இவங்க இந்த முடிவை எடுக்குறாங்க.
ஆப்கானிஸ்தான் வறுமை
ஹெராத் நகரத்தோட ஒதுக்குப்புறத்துல பல வருஷமா மக்கள் வறுமையில வாடுறாங்க. வேலை வாய்ப்பு இல்லாததால, குழந்தைங்களுக்கு சாப்பாடு போடவும் குடும்பத்தை நடத்தவும் பலரும் கிட்னியை விக்கிறாங்க. ஒரு குடும்பத்துல இருக்குற அஞ்சு அண்ணன் தம்பிகள், கடந்த நாலு வருஷத்துல ஆளுக்கு ஒரு கிட்னியை வித்திருக்காங்கன்னா நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க.
உடல் உறுப்பு தானம்
ஆப்கானிஸ்தான்ல உடல் உறுப்பு தானம் பத்தியோ, அதை விக்கிறதை பத்தியோ முறையான சட்டங்கள் கிடையாது. ஹெராத்ல இருக்குற சில ஆஸ்பத்திரிகள்ல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடக்குது. கிட்னி கொடுக்குறவங்களோட சம்மதம் மட்டும்தான் இங்க முக்கியம். எழுத்துப்பூர்வமான சம்மதத்தோட, வீடியோ ரெக்கார்டிங்கும் எடுக்குறாங்க. கடந்த அஞ்சு வருஷத்துல மட்டும் ஹெராத்ல பல நூறு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்குனு ஒரு டாக்டர் சொல்லியிருக்காரு.
தாலிபான்கள் ஆட்சி
ஆப்கானிஸ்தான்ல கிட்னியை விக்கிறது புதுசு கிடையாது. தாலிபான்கள் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே இந்த பழக்கம் இருந்துச்சு. ஆனா, இப்போ பொருளாதார நெருக்கடி அதிகமானதால, கிட்னி விக்கிறவங்களோட எண்ணிக்கையும் அதிகமாகிடுச்சு. குறிப்பா, அகதிகள் முகாம்லயும் குடிசைகள்லயும் வாழ்ற மக்கள் அதிகமா கிட்னியை விக்கிறாங்க. கம்மி விலைக்கு கிட்னி கிடைக்கும்னு வாங்குறவங்களும் இந்த ஏரியாவுக்கு வராங்க.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை
சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஒரு கிட்னியை வித்தா 3,000 முதல் 4,000 டாலர் வரைக்கும் பணம் கிடைச்சுது. ஆனா இப்போ வெறும் 1,500 டாலருக்கு மக்கள் தங்களோட கிட்னியை விக்கிறாங்க. கடந்த அஞ்சு வருஷத்துல அரசு ஆஸ்பத்திரிகள்ல சுமார் 250 கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கு. ஆனா, அரசு கணக்குல வராத பல ஆபரேஷன்கள் நடக்குறதால, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமா இருக்கும்னு சொல்றாங்க.
ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடி
ஹெராத் நகரத்துல கிட்னி விக்கிறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுதுனு ஒரு டாக்டர் கவலையோட சொல்லியிருக்காரு. இவங்கள்ள பல பேர் அகதிகள் முகாம்லயும் குடிசைப் பகுதிகள்லயும் வாழ்றவங்க. பணத் தேவைக்காகவே இவங்க தங்களோட உடல் உறுப்பை விக்கிறாங்க. ஆப்கானிஸ்தானோட பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் இந்த 'ஒன் கிட்னி வில்லேஜ்' ஒரு பெரிய உதாரணமா மாறிடுச்சு.

