MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • வெள்ளை மாளிகையில் எதிரொலித்த ‘மோடி மோடி’ ’ பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள்.. புகைப்படங்கள் உள்ளே..

வெள்ளை மாளிகையில் எதிரொலித்த ‘மோடி மோடி’ ’ பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள்.. புகைப்படங்கள் உள்ளே..

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வெள்ளை மாளிகையில் திரண்டிருந்த ஏராளமான மக்கள் இந்தியக் கொடிகளை அசைத்து, "மோடி, மோடி" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பினர்.

1 Min read
Author : Ramya s
Published : Jun 22 2023, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

27
Modi

Modi

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.

37

வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

47

இந்தியாவும் அமெரிக்காவும் வறுமையை ஒழித்தல், சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல், பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் தூண்டப்பட்ட உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையைக் கையாள்வதில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன என்று அதிபர் ஜோ பிடன் இந்தியா - அமெரிக்க உறவை பாராட்டி பேசினார்.

57

தொடர்ந்து பேசிய மோடி “ நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன். இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்காக வெள்ளை மாளிகையின் வாயில்கள் இவ்வளவு பெரிய அளவில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை.” என்று தெரிவித்தார்

67

பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மக்கள் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் திரண்டிருந்தனர். அவர்கள் இந்தியக் கொடிகளை அசைத்து, "மோடி, மோடி" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பினர்.

 

77

மேலும் “ கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில், உலக ஒழுங்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு, முழு உலகத்தின் வலிமையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். உலக நன்மை மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன” என்றும் மோடி தெரிவித்தார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Recommended image2
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!
Recommended image3
ரூ.15.44 லட்சம் கோடி இந்தியர்களுக்கு கிடைக்குமா..? ட்ரம்ப் விதித்த வரி.. அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved