MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Kim Jong Un Death Rumours: கிம் ஜாங் உன் உயிரிழப்பா? வடகொரியா வெளியிட்ட போட்டோக்கள் எழுப்பும் சந்தேகங்கள்!

Kim Jong Un Death Rumours: கிம் ஜாங் உன் உயிரிழப்பா? வடகொரியா வெளியிட்ட போட்டோக்கள் எழுப்பும் சந்தேகங்கள்!

Kim Jong Un Death Rumours: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை ரத்தக்கசிவால் இறந்துவிட்டதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மரண வதந்தியின் பின்னணி என்ன?

2 Min read
Author : Rayar A
Published : Oct 20 2026, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா?
Image Credit : X

கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த சில நாட்களாகவே அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், அரசு விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே, அவருக்கு திடீரென மூளை ரத்தக்கசிவு (Cerebral haemorrhage) ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் ஒரு செய்தி பரவியது.

சோஷியல் மீடியாவில் 'RIP Kim Jong Un' என பலரும் பதிவிடத் தொடங்கினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில், கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (KCNA) இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா
Image Credit : X

புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா

திங்கள்கிழமை (அக். 19) வடகொரியாவில் நடந்த ஒரு பெரிய கண்காட்சி மற்றும் விற்பனை மையத்தை கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சோஷியல் மீடியாவில் அவரது மரண செய்தி தீவிரமாக பரவியதாலேயே, இந்த புகைப்படங்கள் அவசரமாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், கிம் ஜாங் உன் மரணம் குறித்து பரவும் செய்திகள் முற்றிலும் பொய் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

34
தேதியை கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
Image Credit : X

தேதியை கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், அது மேலும் பல குழப்பங்களைத்தான் ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் எந்த தேதியில், எங்கு எடுக்கப்பட்டது என்ற எந்த தகவலும் அதில் இல்லை.

இதனால், இது பழைய புகைப்படங்கள் என்ற வாதம் வலுத்து வருகிறது. கிம் ஜாங் உன் நேரடியாக மக்கள் முன் தோன்ற வேண்டும், அதைவிட்டுவிட்டு இப்படி புகைப்படங்களையோ வீடியோக்களையோ வெளியிடுவது சரியான விளக்கமாக இருக்காது என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

44
மரண வதந்தி பரவியது எப்படி?
Image Credit : X

மரண வதந்தி பரவியது எப்படி?

சீனாவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஷி வான்ஜுன் (Xie Wanjun) தனது உரையின் போது, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகக் கூறினார். அதிகார மாற்றத்தின் போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் கிளர்ச்சிகளைத் தடுக்க சீனா 9,000 ராணுவ வீரர்களை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெய்ஜிங்கில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னுக்கு சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் தீவிர மூளை ரத்தக்கசிவு காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

''மேல் சிகிச்சைக்காக கிம் ஜாங் உன் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடகொரிய அரசின் உத்தரவின்படி, கிம் ஜாங் உன் குறித்த எந்த தகவலும் வெளியே சொல்லப்படவில்லை. அவரது உடல் ரகசியமாக வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது'' என ஷி வான்ஜுன் தெரிவித்தார். இவருடைய இந்த பேச்சால்தான் கிம் ஜாங் உன் மரண செய்தி உலகெங்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை; 2 நாள் லீவு கன்ஃபார்ம்: 1988-க்கு பிறகு நிகழ்ந்த தொழிலாளர் புரட்சி!
Recommended image2
என்னது கடலில் ஐபோன்கள் மிதக்குதா? ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்ற மக்கள்!
Recommended image3
Kidney Stone : கிட்னி கல்லை விற்று வீடு கட்டிய நடிகர்! சிறுநீரகக் கல் ரூ.71 லட்சத்துக்கு ஏலம் போனது எப்படி?
Related Stories
Recommended image1
கிம்-ஜாங் உன்-ன் ஆடம்பர ரயிலில் இத்தனை வசதிகளா? புடினின் சொகுசு ரயிலில் கூட இந்த வசதிகள் இல்லையாம்
Recommended image2
கிம் ஜாங் உன் நாட்டில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சனை.. சோகத்தில் வடகொரியா மக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved