MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை; 2 நாள் லீவு கன்ஃபார்ம்: 1988-க்கு பிறகு நிகழ்ந்த தொழிலாளர் புரட்சி!

வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை; 2 நாள் லீவு கன்ஃபார்ம்: 1988-க்கு பிறகு நிகழ்ந்த தொழிலாளர் புரட்சி!

பிரேசிலில் வாராந்திர வேலை நேரத்தை 44 மணி நேரத்திலிருந்து 40 மணி நேரமாகக் குறைப்பதற்கும், ஊதியக் குறைப்பின்றி வாரம் 2 நாட்கள் விடுமுறையை உறுதி செய்வதற்கும் அந்நாட்டு நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 19 2026, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை; 2 நாள் லீவு கன்ஃபார்ம்
Image Credit : x

வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை; 2 நாள் லீவு கன்ஃபார்ம்

வாரத்திற்கு 6 நாளும் மாடாய் உழைத்து, ஒரே ஒரு நாள் லீவுலயும் துணி துவைச்சே நேரம் போயிடுது... என்று புலம்பும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு பிரேசிலில் இருந்து கனவுத் திட்டம் நனவாகி வந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றம் வாராந்திர வேலை நேரத்தை 44 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைத்து, சம்பளத்தில் 1 பைசா கூடக் குறைக்காமல் வாரம் 2 நாட்கள் முழு விடுமுறையை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 3 கோடிக்கும் அதிகமான உழைக்கும் வர்க்கத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடப்போகிறார்கள்.

பிபிசி தகவல்களின்படி, கடந்த 1988-ம் ஆண்டிற்குப் பிறகு பிரேசில் தொழிலாளர் வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய புரட்சி இதுவாகும். கடந்த மே மாதம் கீழவையில் வெற்றிபெற்ற இந்த மசோதாவிற்கு, செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 75 உறுப்பினர்கள் ஆதரவாகவும், வெறும் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேர்தல் களத்தில் கொளுத்திப்போட்ட அரசியல் பட்டாசு
Image Credit : x

தேர்தல் களத்தில் கொளுத்திப்போட்ட அரசியல் பட்டாசு

அக்டோபர் 25 அன்று நடைபெறவிருக்கும் பிரேசில் அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றுக்கு (Run-off) முன்னதாக, இந்த விவகாரம் அனல் பறக்கும் அரசியல் களமாக மாறியுள்ளது. தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கும், வலதுசாரி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சனாரோவிற்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.

முதல் சுற்றில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான ஃபிளாவியோ 47% வாக்குகளையும், அதிபர் லுலா 45.2% வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆரம்பத்தில், இது தேர்தல் லாபத்திற்காகச் செய்யப்படும் கபட நாடகம் என்று இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்த ஃபிளாவியோ போல்சனாரோ, கடைசியில் ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவைப் பார்த்து அந்தர்பல்டி அடித்து ஆதரவாக வாக்களித்துள்ளார்.

35
அப்பட்டமான தேர்தல் சந்தர்ப்பவாதம் - அதிபர் லுலா சாடல்
Image Credit : x

அப்பட்டமான தேர்தல் சந்தர்ப்பவாதம் - அதிபர் லுலா சாடல்

பெரும்பாலான பிரேசில் தொழிலாளர்கள் வாரத்திற்கு 6 நாள் வேலை செய்யும் முறையை ஒழிக்க நினைக்கிறார்கள்; அதனால் நான் இதற்கு ஆதரவாக வாக்களிக்கிறேன் என்று போல்சனாரோ பவ்யமாகத் தெரிவித்தார். ஆனால், அவரது இந்தத் திடீர் மனமாற்றத்தை அப்பட்டமான தேர்தல் சந்தர்ப்பவாதம் என அதிபர் லுலா பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

மசோதா நிறைவேறியதும் அதிபர் லுலா தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? மனிதர்கள் வாழ்வதற்கும், நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கும், குழந்தைகள் கண்முன்னே வளர்வதைப் பார்த்து ரசிப்பதற்கும், தங்களைப் பராமரித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் கூடுதல் நேரம் கிடைப்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

45
மாற்றம் எப்படி அமலுக்கு வரும்?
Image Credit : x

மாற்றம் எப்படி அமலுக்கு வரும்?

இந்த புதிய நடைமுறை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தராத வகையில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. முதல் 2 மாத காலத்திற்குப் பிறகு, வாராந்திர வேலை நேரம் 42 மணி நேரமாகக் குறைக்கப்படும். அதிலிருந்து ஓராண்டு கழித்து, முழுமையாக 40 மணி நேரமாக குறைக்கப்பட்டு, 2 நாள் விடுமுறை கட்டாயமாக்கப்படும்.

55
மனசும் உடம்பும் ரொம்ப டயர்டு: எளிய தொழிலாளர்களின் குரல்
Image Credit : chatgpt

மனசும் உடம்பும் ரொம்ப டயர்டு: எளிய தொழிலாளர்களின் குரல்

ரியோ டிஜெனிரோவில் சூப்பர் மார்க்கெட் கேஷியராக வேலை பார்த்துக்கொண்டே, கணவரின்றி தனியாக 3 பெண் குழந்தைகளை வளர்த்து வரும் 36 வயதான லூசியானா டி அல்மேடாவின் வார்த்தைகள் இந்தச் சட்டத்தின் அவசியத்தை உணர்த்துகின்றன. வாரத்துல 6 நாள் வேலை. கிடைக்கிற ஒரே ஒரு நாளும் வீட்டு வேலைகளைப் பார்த்து முடிக்கவே போதாது. உடம்பும், குறிப்பா என் மனசும் ரொம்பவே களைத்துப் போய் விட்டது.

என் பொண்ணுங்களோட நேரம் செலவழிக்கவும், கொஞ்சம் மனமகிழ்ச்சியோடு இருக்கவும், இல்லன்னா வீட்ல சும்மாவாவது படுத்து ஓய்வெடுக்கவும் எனக்கு நேரம் வேணும். இந்த சட்டம் என் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் 70% மக்கள் வேலை நேரக் குறைப்புக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இயந்திரமயமாகிப் போன நவீன வாழ்க்கையில், மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையையே மீட்டுக் கொடுக்கும் ஒரு சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்னது கடலில் ஐபோன்கள் மிதக்குதா? ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்ற மக்கள்!
Recommended image2
Kidney Stone : கிட்னி கல்லை விற்று வீடு கட்டிய நடிகர்! சிறுநீரகக் கல் ரூ.71 லட்சத்துக்கு ஏலம் போனது எப்படி?
Recommended image3
இன்னும் பிறக்காத குழந்தைகளின் உணவை உண்கிறோம்! மண் வளம் குறித்து சத்குரு எச்சரிக்கை
Related Stories
Recommended image1
என்னது கடலில் ஐபோன்கள் மிதக்குதா? ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்ற மக்கள்!
Recommended image2
Kidney Stone : கிட்னி கல்லை விற்று வீடு கட்டிய நடிகர்! சிறுநீரகக் கல் ரூ.71 லட்சத்துக்கு ஏலம் போனது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved