காசாவின் பெரிய பகுதிகளை கைப்பற்றிய இஸ்ரேல்! மனிதாபிமானமற்ற தாக்குதலில் 23 பேர் பலி!
காசாவின் மிகப்பெரிய பகுதிகளை கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

Israel captures large areas of Gaza: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் விதிமுறைகளை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Near Israel's border with Gaza
பல்வேறு நாடுகளின் தலையீட்டின்பேரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே 42 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்ததையும் மீறி இரு தரப்பினரும் தாக்குவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. போர் நிறுத்த ஒப்பந்த காலம் முடிந்தபிறகு, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் ஹமாஸ் அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ படைகள் காசாவில் பெரிய பகுதிகளை கைப்பற்றி பாலஸ்தீன பிரதேசத்தை சிறியதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், 'காசாவில் உள்ள மிகப்பெரிய பகுதிகளை எங்களின் ராணுவம் கைப்பற்றி விட்டது. அந்த பகுதி இப்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனம் சிறுமைப்படுத்தப்பட்டு, தனித்து விடப்பட்டுள்ளது. ஹமாஸ் பிணையக் கைதிகளை விடுவிக்கும் வரையியிலும், முழுமையாக ஹமாஸை ஒழித்துக்கட்டும் வரையிலும் போரை நிறுத்த மாட்டோம்'' என்றார்.
பதில் வரியை 90 நாள் நிறுத்திவைத்த டிரம்ப்; சீனாவுக்கு மட்டும் வரி மேல் வரி!
Israel Attack on Gaza
மேலும் குடியிருப்பு பகுதியில் இஸ்ரே நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். அதாவது காசா நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறியது. பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். மூத்த ஹமாஸ் தலைவரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Israel-Palestine war
காசா நகரத்தின் ஷுஜையா பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறினார். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று கூறிய அவர் காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று கூறினார். இந்த தாக்குதலை மிகவும் கொடூரமான இனப்படுகொலைச் செயல்களில் ஒன்றாக ஹமாஸ் கருதி இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். உணவு, உடை, மருத்துவ வசதி ஏதும் இல்லாமல் 2.4 மில்லியன் மக்கள் வாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.