MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு! கைகொடுக்கும் நாடுகள்! மூக்குடைப்படும் பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு! கைகொடுக்கும் நாடுகள்! மூக்குடைப்படும் பாகிஸ்தான்!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : May 09 2025, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Saudi Arabia Supports India

Saudi Arabia Supports India

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வலுத்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் இந்தியாவுக்கு வருகை தந்து, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு

இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு

இதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்துள்ள எஸ். ஜெய்சங்கர், அல்-ஜுபைரை சந்தித்து, பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகக் கூறினார். இதேபோல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் இந்தியாவுக்கு வந்து ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசி, போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி 

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா முழுமையாக அழித்தது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் ராணுவம் இதை பொறுக்க முடியாமல் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் என இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் இந்திய ராணுவம் அனைத்தையும் முறியடித்தது.

34
பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்தது. பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தானின் வான் எச்சரிக்கை அமைப்புகள் அனைத்தையும் இந்தியா தாக்கி அழித்தது. 

இந்தியாவின் பதிலடியால் நிலைகுலைந்த பாகிஸ்தான் 

மறுபக்கம பாகிஸ்தான் மீது இந்தியாவின் முப்படைகளும் அதிதீவிர தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் ராவல்பிண்டி, பெஷாவர், கராச்சி, குவொட்டா என அனைத்து நகரங்களிலும் இந்திய ராணுவம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தியது. இந்திய கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்த நிலையில், இந்தியாவின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஒன்றை கூட பாகிஸ்தானால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

44
பாகிஸ்தான் பிரதமர் தப்பி ஓட்டம்

பாகிஸ்தான் பிரதமர் தப்பி ஓட்டம்

இந்தியாவின் மும்முனை தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போயுள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷேரீப் பதுங்கு குழியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பயந்து ஓடி விட்டனர். ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை தேவையின்றி சீண்டிய பாகிஸ்தான் அதற்குரிய தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியா-பாகிஸ்தான் போர்
ஜம்மு காஷ்மீர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Countries Without Trains: இந்த நாடுகளில் ரயிலே கிடையாது.. இந்தியாவின் அண்டை நாடு ஒன்றும் இந்த பட்டியலில் இருக்கு
Recommended image2
Thailand Travel Rules: தாய்லாந்து போறீங்களா.? இந்தியர்களுக்கு புதிய விதிகள்.. இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்
Recommended image3
New World Map: நாம் பார்த்த உலக மேப் தவறா? ஆப்பிரிக்காவை பெரிதாக காட்டும் புதிய வரைபடம்!
Related Stories
Recommended image1
வீட்டுக்குள்ளேயே இருங்கள்! ஜன்னல் ஓரம் இருக்காதீர்கள்! பஞ்சாபில் மக்களுக்கு அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved