- Home
- உலகம்
- அமெரிக்காவில் கால் வைத்த அந்த நிமிடம்: காதுகளை கிழித்த போர் விமான சத்தம் - புடின்க்கான வரவேற்பா? மிரட்டலா?
அமெரிக்காவில் கால் வைத்த அந்த நிமிடம்: காதுகளை கிழித்த போர் விமான சத்தம் - புடின்க்கான வரவேற்பா? மிரட்டலா?
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையேயான சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகமே உற்று நோக்கிய சந்திப்பு
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்லும் நிலையில் அதனை நிறுத்தும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலகின் இரு துருவங்களாக அறியப்படும் அமெரிக்கா, ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை உலகமே எதிர்பார்க்கும் நிகழ்வாக அமைந்தது.
#WATCH | Alaska, USA | President of Russia, Vladimir Putin touches down in Anchorage ahead of his talks with US President Donald Trump.
Source: Reuters pic.twitter.com/Kj25SGF6V9— ANI (@ANI) August 15, 2025
புடின்க்காக காத்திருந்த ட்ரம்ப்
முன்னதாக தனி விமானம் மூலம் விமான நிலையத்திற்கு வந்த அதிபர் ட்ரம்ப் புடினின் வருகைக்காக விமானத்திலேயே காத்திருந்தார். அப்போது தனது நாட்டு விமானத்தில் புடின் மாஸாக எண்ட்ரி கொடுக்கவே இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் விமானத்தில் இருந்து இரங்கி வந்தனர். அதிபர் புடின்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
புடின்க்கு பிரமாண்ட வரவேற்பு
இரு தலைவர்களும் கூட்டாக நடந்து வந்தபோது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் காதுகளை கிழிக்கும் அளவிலான சத்தத்தோடு வானில் பறக்கவிடப்பட்டது. ட்ரம்ப் தனது பாணியில் புடின்க்கு மிரட்டலான வரவேற்பு அளித்ததாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டு அதிநவீன போர் விமானங்களை ட்ரம்ப், புடின்க்கு அறிமுகப்படுத்தி, விளக்கி பேசினார்.
President Donald J. Trump greets Russian President Vladimir Putin at the historic summit in Anchorage, Alaska. pic.twitter.com/Mes0sruTNa
— The White House (@WhiteHouse) August 15, 2025
நீங்க என்ன சொல்றீங்க?
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ட்ரம்பின் காரில் ஒன்றாக பேச்சுவார்த்தைக்கு புறப்பட்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது மனிதர்களை கொலை செய்வதை நிறுத்துவீர்கள் என புடின்னிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு நீங்கள் கூறியது காதில் கேட்கவில்லை என்பது போன்று சைகை செய்து விட்டு புடின் புறப்பட்டுச் சென்றார்.
#WATCH | Alaska, USA | US President Donald Trump and Russian President Vladimir Putin share the same car to reach the venue for their talks.
Source: Reuters pic.twitter.com/X9YkJvqb6g— ANI (@ANI) August 15, 2025