MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • கிறிஸ்துமஸை முன்னிட்டு அரை நிர்வாண ஓட்டம்! ஹங்கேரியின் வித்தியாசமான கொண்டாட்டம் ஏன் தெரியுமா?

கிறிஸ்துமஸை முன்னிட்டு அரை நிர்வாண ஓட்டம்! ஹங்கேரியின் வித்தியாசமான கொண்டாட்டம் ஏன் தெரியுமா?

ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையைய முன்னிட்டு புடாபெஸ்ட் ரன் எனப்படும் அரை-நிர்வாண சாண்டா ஓட்டம் நடைபெற்றது.

1 Min read
Author : SG Balan
Published : Dec 11 2023, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையைய முன்னிட்டு புடாபெஸ்ட் ரன் எனப்படும் அரை-நிர்வாண சாண்டா ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு அரைநிர்வாணமாக ஓடினர்.

25

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் இந்த அரை நிர்வாண சாண்டா ஓட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் இந்த ஆண்டு பங்கேற்பாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை Tiny Ray of Hope என்ற ஹங்கேரிய அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.

35

இந்தத் தொகையை அந்த அறக்கட்டளை கடுமையான உடற்குறைபாடுகள் கொண்ட குறைமாத குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

45

கிறிஸ்துமஸ் தாத்தா போல தொப்பி அணிந்திருந்த பங்கேற்பாளர்கள் 'ஹோ-ஹோ' என்று கத்தி ஆரவாரம் செய்துகொண்டு ஓடினர். மேலாடை இல்லாமல் ஓடியவர்கள் ஆங்காங்கே உடற்பயிற்சி செய்தபடியும் நடனம் ஆடியபடியும் சென்றனர். உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் அவர்களை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

55

புடாபெஸ்ட் ரன் நிகழ்ச்சியின் நிறுவனர் அமெரிக்காவின் பாஸ்டனில் இதேபோன்ற ஓட்டத்தைப் பார்த்த பிறகு, அதே போன்ற நிகழ்ச்சியை புடாபெஸ்ட் நகரிலும் நடத்த முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
Recommended image2
இலங்கையில் புது ரூட்: 4 நாள் வேலை.. புதன்கிழமை லீவு.. பெட்ரோல் தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு!
Recommended image3
நடனமாடும் மரண ஏவுகணைகள்..! அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம்..! ஈரான்-இஸ்ரேல் போரில் அடுத்தக்கட்ட உச்சம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved