இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு இதுதான் தீபாவளி பரிசு!
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) H-1B விசா கட்டண உயர்வு குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ளது. படிக்கும் மாணவர்கள் மற்றும் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) H-1B விசா விண்ணப்ப கட்டண உயர்வில் முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் கடுமையான கட்டணக் கவலை நீங்கப்போகிறது.
புதிய கட்டணங்கள் யாருக்கு பொருந்தும்?
USCIS அறிவிப்பின் படி, $1,00,000 (சுமார் ரூ.83 லட்சம்) கட்டணம் அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து H-1B விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, அமெரிக்காவில் வேலைக்காக புதிய விண்ணப்பத்தை தாக்கும் நபர்கள் மட்டும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு சலுகை
ஏற்கனவே அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள், F-1 விசாடன் H-1Bக்கு மாற்றம் செய்யும் மாணவர்கள், மற்றும் தற்போதைய H-1B விசா ஹோல்டர்கள் எல்லோரும் இந்த புதிய கட்டணத்திலிருந்து விலகியுள்ளனர். H-1B விஸா நீட்டிப்பு, மாற்றம் அல்லது பரிசீலனை செய்யும் பொழுதும் கட்டணம் தேவையில்லை. இதனால் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும் தளர்வை அனுபவிக்கலாம்.
H-1B விசா
இந்த விதி செப்டம்பர் 21, 2025 அறிவிப்புக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 2024ல் வெளியிடப்பட்ட H-1B விசாக்களில் 70% இந்தியர்கள் பெற்றனர். அதனால் புதிய விதிகள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரும் தளர்வு ஆகும்.