- Home
- உலகம்
- ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே விழுந்த டிரோன்.! அலறும் இங்கிலாந்து வீரர்கள்- பிஎஸ்எல் போட்டி ரத்தா.?
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே விழுந்த டிரோன்.! அலறும் இங்கிலாந்து வீரர்கள்- பிஎஸ்எல் போட்டி ரத்தா.?
பாகிஸ்தானில் ட்ரோன் விபத்து, வெடிப்புகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் ட்ரோன் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்தனர். லாகூர் மற்றும் கராச்சியிலும் வெடிப்புகள் நிகழ்ந்தன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு இடங்களை தாக்கும் வகையில் 15 ஏவுகனைகளை பாகிஸ்தான் ஏவியது. இதனை நடுவானிலேயே இந்திய வான்பாதுகாப்பு கவசம் தாக்கி அழித்தது.
இந்த நிலையில் இன்று காலை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் விபத்துக்குள்ளானது. பெஷாவர் ஜல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த ட்ரோன் அங்குள்ள உணவக கட்டிடத்தில் விழுந்தது. இதில் அந்த கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்ட நிலையில், இரண்டு பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Pakistan Super League
உள்ளூர் ஊடகங்களின்படி, தாக்குதலுக்குள்ளான பகுதி தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் ராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையதா அல்லது கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த தாக்குல் சம்பவத்தால் பி.எஸ்.எல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. சிலர் தங்க விரும்புவதாகவும், மற்றவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்அவசரக் கூட்டத்தை கூட்டி வீரர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்து வருகிறது.
லாகூரின் வால்டன் சாலைப் பகுதியில் மூன்று வெடிப்புகள் நிகழ்ந்தன. கராச்சியிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ளன. லாகூர் மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் வணிக விமானங்கள் சேவை இன்று மதியம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடனான எல்லைப் பதற்றம் மற்றும் ராவல்பிண்டி, லாகூர், கராச்சியில் நடந்த சம்பவங்கள் பி.எஸ்.எல் 2025 இன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரிய கேள்வியை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராவல்பிண்டி வந்த வீரர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.