- Home
- உலகம்
- Countries Without Trains: இந்த நாடுகளில் ரயிலே கிடையாது.. இந்தியாவின் அண்டை நாடு ஒன்றும் இந்த பட்டியலில் இருக்கு
Countries Without Trains: இந்த நாடுகளில் ரயிலே கிடையாது.. இந்தியாவின் அண்டை நாடு ஒன்றும் இந்த பட்டியலில் இருக்கு
Countries Without Trains: நம்ம ஊர்ல தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்ல பயணம் செய்றாங்க. ஆனா உலகத்துல சில நாடுகள்ல ரயில் சேவையே கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியுமா? அங்க ஏன் ரயில்கள் ஓடுறதில்லை? வாங்க பார்க்கலாம்.

ரயில் இல்லாத நாடுகள்
தூரப் பயணம்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது ரயில் தான். கூக் கூ சத்தத்தோட தண்டவாளத்துல ஓடுற ரயில் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால நினைச்சுப் பார்க்க முடியாது. ஆனா, உலகத்துல ஒரு தண்டவாளம் கூட இல்லாத நாடுகள் இருக்கு. அந்த நாடுகள் என்னென்ன, அங்க ஏன் ரயில் சேவை இல்லைன்னு இப்போ பார்க்கலாம்.
1. பூட்டான்
1. பூட்டான்: இங்க பஸ், கார் தான் முக்கியப் போக்குவரத்து. இமயமலைப் பகுதியில இருக்கிறதால, செங்குத்தான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் வழியா தண்டவாளம் போடுறது ரொம்ப கஷ்டம். வெளிநாடுகளுக்குப் போக 'பரோ' சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துறாங்க.
2. ஐஸ்லாந்து: இங்கேயும் கார், பஸ் தான் அதிகம். அடிக்கடி வெடிக்கிற எரிமலைகள், உருகும் பனிமலைகள், கடுமையான குளிர் இருக்கிறதால இங்க தண்டவாளம் அமைக்கிறது சாத்தியமே இல்லை. உள்ளூர் பயணங்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் பயன்படுத்துறாங்க.
சென்னை சென்ட்ரலின் வருமானம் எவ்வளவு தெரியுமா? இந்தியாவின் டாப் 5 ரயில் நிலையங்கள் பட்டியல் இதோ!
சைப்ரஸ்
3. சைப்ரஸ்: 1905 முதல் 1951 வரை இங்க ரயில் ஓடிச்சு. ஆனா லாபம் இல்லாததாலயும், பராமரிப்புச் செலவு அதிகமானதாலயும் அதை மூடிட்டாங்க. இது ஒரு தீவுங்கிறதால கப்பல், படகுகளை அதிகம் நம்பியிருக்காங்க. உள்ளூர்ல சொகுசு பஸ், கார் பயன்படுத்துறாங்க.
4. அண்டோரா: பைரனீஸ் மலைகளுக்கு நடுவே இருக்கிற ரொம்ப சின்ன நாடு இது. சமவெளிப் பகுதியே இல்லாததால இங்க ரயில் நெட்வொர்க் அமைக்க முடியலை. உள்ளூர்ல பஸ்ஸும், பக்கத்துல இருக்கிற பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குப் போக ஹெலிகாப்டரும் பயன்படுத்துறாங்க.

