MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்த நாடுகளில் ரயில் போக்குவரத்து இல்லை! ஏன் தெரியுமா?

இந்த நாடுகளில் ரயில் போக்குவரத்து இல்லை! ஏன் தெரியுமா?

உலகின் பல நாடுகளில் ரயில்வே முக்கிய போக்குவரத்து முறையாக இருந்தாலும், சில நாடுகளில் ரயில்வே இல்லை. புவியியல், பொருளாதாரம், வரலாற்றுச் சூழல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நாடுகள் ரயில்வே அமைப்புகளை ஏற்படுத்தவில்லை.

2 Min read
Author : Web Team
Published : Nov 25 2024, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Countries Without Railways

Countries Without Railways

ரயில்வே என்பது நவீன போக்குவரத்தின் மைல் கல்லாக கருதப்பட்டாலும், எல்லா நாடுகளும் இந்தப் பயண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. ரயில்வே நெட்வொர்க்குகள் உலகளாவிய அளவில் பரவியிருந்தாலும், சில நாடுகள் தனித்துவமான புவியியல், பொருளாதாரம் அல்லது வரலாற்றுச் சூழல்களால் ரயில் பாதைகள், நிலையங்கள் அல்லது அமைப்புகள் இல்லாமல் இருக்கின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Countries Without Railways

Countries Without Railways

கடுமையான வானிலை, சிறிய மக்கள், மாற்று போக்குவரத்து முறைகளை நம்பியிருப்பது அல்லது அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் இதற்கு காரணமாக இருக்கின்றன.. ரயில்வே நெட்வொர்க் இல்லாத நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்க்லாம்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தின் வரலாற்றில் மூன்று தனித்துவமான ரயில்வே நெட்வொர்க்குகள் இருந்தபோதிலும், அந்நாட்டின் பொது போக்குவரத்தாக ரயில்வே இல்லை.. ஆட்டோமொபைல்களின் போட்டி, சிறிய அளவிலான மக்கள் தொகை மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் உள்ளிட்ட காரணங்கள் அதன் பின்னணியில் இருக்கின்றன.  ரயில்வே திட்டங்கள் 1900 களின் முற்பகுதியில் இருந்தபோதிலும், இந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. 2000களில் தலைநகரை மையமாகக் கொண்டு ரயில் பாதையை அமைப்பதற்கான முயற்சிகள் மீண்டும் தலைதூக்கியது.

35
Countries Without Railways

Countries Without Railways

அன்டோரா

மக்கள்தொகையில் 11வது சிறிய நாடாகவும், நிலப்பரப்பில் 16வது இடத்திலும் உள்ள அன்டோராவில் ரயில்வே உள்கட்டமைப்பு எதுவும் இல்லை. ஒரு பிரெஞ்சு இரயில் பாதையானது அன்டோரான் பிரதேசத்தில் 1.2 மைல் தொலைவில் உள்ளது, மேலும் அருகிலுள்ள ரயில் நிலையம் அன்டோரா-லா-வெல்லாவிற்கு பேருந்து இணைப்பு வழியாக பிரான்சுடன் இணைகிறது.

பூட்டான்

தெற்காசியாவில் நிலத்தால் சூழப்பட்ட சிறிய நாடான பூட்டானில் ரயில் பாதைகள் இல்லை. இருப்பினும், பூட்டானின் தெற்குப் பகுதியை இந்தியாவின் விரிவான இரயில் வலையமைப்புடன் இணைக்கும் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் நேபாளத்தில் உள்ள டோரிபாரியில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ஹஷிமாரா வரையிலான 11 மைல் ரயில் பாதை அடங்கும்.

45
Countries Without Railways

Countries Without Railways

குவைத்

எண்ணெய் வளம் மிகுந்த நாடான குவைத், சாலை அடிப்படையிலான போக்குவரத்தை முதன்மையாக நம்பியுள்ளது. தற்போது ரயில்வே அமைப்பு இல்லாமல், குவைத் நகரை ஓமனுடன் இணைக்கும் 1,200 மைல் பாதை, வளைகுடா ரயில்வே நெட்வொர்க் உள்ளிட்ட ரயில்வே திட்டங்களில் குவைத் முதலீடு செய்து வருகிறது.

மாலத்தீவுகள்

தெற்காசிய தீவுக்கூட்டமான மாலத்தீவு, சிறிய நிலப்பரப்பு காரணமாக ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இங்கு சாலைகள், நீர்வழிகள் மற்றும் விமானப் பயணம் மூலம் போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது.

கினியா-பிசாவ்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவ்-ல் ரயில் போக்குவரத்து இல்லை.. அங்கு நடைபாதை சாலைகள் மற்றும் பிற இடங்களில் செப்பனிடப்படாத பாதைகளை நம்பியுள்ளது. 1998 ஆம் ஆண்டில், ஒரு ரயில்வே அமைப்பை நிறுவ போர்ச்சுகல் உடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

55
Countries Without Railways

Countries Without Railways

லிபியா

லிபியாவில் ஒரு காலத்தில் ரயில்வே நெட்வொர்க் இயங்கி வந்தது, ஆனால் அது உள்நாட்டுப் போரின் போது அகற்றப்பட்டது. 2001 இல் புனரமைப்பு முயற்சிகள் தொடங்கப்பட்ட போதிலும், ரயில் சேவைகள் 1965 இல் நிறுத்தப்பட்டன. புதிய ரயில் இணைப்புகளுக்கான திட்டங்கள், ராஸ் அஜ்திர் மற்றும் திரிபோலி இடையே ஒரு பாதை உட்பட, 2008 மற்றும் 2009 இல் தொடங்கப்பட்டது.

ஏமன்

ஏமனில் ரயில்வே நெட்வொர்க் இல்லை. அந்நாட்டின் சவாலான நிலப்பரப்பு மற்றும் நீண்டகால மோதல்கள் காரணமாக, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. சாலை போக்குவரத்து அங்கு பிரதானமாக இருக்கிறது., நீண்ட தூரங்களுக்கு, குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் அணுகல் சவால்களைக் கருத்தில் கொண்டு, விமானப் பயணம் பெரும்பாலும் விரும்பப்படுகிறது.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved