உலக ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறிய இந்தியா.. எத்தனையாவது இடம் தெரியுமா?
சர்வதேச Global Transparency அமைப்பு 180 நாடுகளைக் கொண்ட 2025ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது, ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஊழல் குறியீடு 2025 தரவரிசை
சர்வதேச அளவில் ஊழல் நிலவரம் குறித்து 180 நாடுகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது Global Transparency அமைப்பின் புதிய அறிக்கை, 2025ஆம் ஆண்டிற்கான முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தெற்கு சூடான மற்றும் சோமாலியா போன்ற நாடுகள் அதிக ஊழல் நிலவுகின்ற நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலைமை மாறுபட்டுள்ளது. பல முன்னேற்ற நாடுகளில் ஊழல்கள் சரிந்துள்ளன. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் ஊழல் மதிப்பெண் குறைந்துள்ளது.
உலக ஊழல் பட்டியல்
ஜெர்மனி மட்டுமே ஐரோப்பாவில் சற்று முன்னேற்றம் கண்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு இடம் பின்னடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு 28வது இடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 29வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் அளவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டபோதும், மதிப்பெண் உயர்வு ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆசியாவில் சீனாவின் நிலைமை மாறாமல் உள்ளது. 43 என்ற மதிப்பெண்ணுடன் 76வது இடத்தில் சீனா நீடிக்கிறது.
இந்தியா ஊழல் தரவரிசை
இந்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை சிறிதளவு மேம்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 92வது இடத்தில் இருந்த இந்தியா, 2025ல் 91வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறியீட்டு மதிப்பெண் 39 ஆக ஊழல் பதிவாகியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஊழல் குறித்த நிலைமை முழுமையாக சரியாகிவிட்டது என்று சொல்ல முடியாதபோதிலும், ஒரு நிலையான முன்னேற்றம் காணப்படுகிறது.
180 நாடுகள் அறிக்கை
ஊழல் குறைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், கனிசமான முன்னேற்றம் பதிவாகவில்லை. இதே நேரத்தில், இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் மெதுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. 2023ல் 93வது இடத்தில் இருந்தது. 2024ல் ஒரு இடம் முன்னேறி 92, பின்னர் 2025ல் 91வது இடம். இருப்பினும் 39 என்ற மதிப்பெண் உலக தரவரிசையில் இன்னும் ஆபத்தான அளவாகவே கருதப்படுகிறது.
முன்னேற்றம் கண்ட இந்தியா
இந்த அறிக்கை நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளுக்கான அரசியல் நிதியுதவி, அந்த அமைப்புகளின் செயல்திறன், சேவைகள் பெற பணம் செலுத்தும் நிலை, பத்திரிகையாளர்கள் மீது அரசின் அழுத்தம் போன்ற காரணிகள் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அளவுகோல்கள் ஒவ்வொரு நாட்டின் நிர்வாகத் தரத்தையும் வெளிப்படுத்துகின்றன.

