- Home
- உலகம்
- சீன ஆயுதங்கள் சூப்பர்! பொய் மூட்டையை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்! நெத்தியடி கொடுத்த இந்தியா!
சீன ஆயுதங்கள் சூப்பர்! பொய் மூட்டையை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்! நெத்தியடி கொடுத்த இந்தியா!
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால், இந்தியா பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்து அபார வெற்றி பெற்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்
கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலின்போது, சீனத் தயாரிப்பு ஆயுதங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டன என்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் கூறியுள்ளது.
ஆனால், இந்தியா பயன்படுத்திய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இந்த போரில் அபார வெற்றி கண்டதாகவும், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்ததாகவும் இந்திய விமானப்படைத் தளபதி (IAF Chief) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டூம் விடும் பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் (ISPR) டைரக்டர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் அனைத்து வகையான தொழில்நுட்பங்களுக்கும் தயாராக இருக்கிறோம். சீனத் தளவாடங்கள், மே மாதம் நடந்த போரில், மிகவும் சிறப்பாக செயல்படுவதை நிரூபித்துள்ளன," என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் 7 போர் விமானங்களைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட இந்தியாவின் தாக்குதலில் வீழ்த்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
ஜெனரல் சௌத்ரியின் இந்தக் கூற்றுகள், கள நிலவரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளன.
பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் PL-15 ஏவுகணை போன்ற அதிநவீன ஆயுதங்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சீனாவின் HQ-9P ஏவுகணைகள் மற்றும் JF-17, J-10 போர் விமானங்களும் இந்தியாவின் தாக்குதலில் தகர்க்கப்பட்டன.
இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா பாகிஸ்தானின் 8 முதல் 10 போர் விமானங்களை அழித்ததாக தெளிவுபடுத்தியுள்ளார். அதில் அமெரிக்கத் தயாரிப்பான F-16, சீனத் தயாரிப்பான JF-17 விமானங்களும் அடங்கும்.
பாகிஸ்தானின் பொய்கள்
பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களின் செயல்திறன் போரில் தனித்து விளங்கியது. துல்லியமான தாக்குதல்களால் பாகிஸ்தானின் பல முக்கிய விமான தளங்கள் அழிக்கப்பட்டன.
இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதை ஏ.பி. சிங் நிராகரித்துள்ளார். பாகிஸ்தானின் கூற்றுகள் கட்டுக்கதைகள் எனச் சாடியுள்ளார்.
நீண்ட காலமாகவே சீனாவைச் சார்ந்துள்ள பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து பெருமளவு கடனுதவிகளையும், ஆயுதங்களையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.