- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அன்பில் மகேஷ் நல்லா நடிப்பாரு இது தெரியுமா? அவர் நடிச்ச சூப்பர் சீரியல் பெயர் தெரியுமா??
அன்பில் மகேஷ் நல்லா நடிப்பாரு இது தெரியுமா? அவர் நடிச்ச சூப்பர் சீரியல் பெயர் தெரியுமா??
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசியலுக்கு வரும் முன் சின்னத்திரை சீரியலில் நடித்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Anbil Mahesh Acted in Serial
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவர் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ், இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதேதொகுதியில் வென்ற அன்பில் மகேஷுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
ட்ரோல் செய்யப்படும் அன்பில் மகேஷ்
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கவனம் ஈர்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், சமீபகாலமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறார். இதற்கு முக்கிய காரணம், கரூரில் நடந்த சம்பவம் தான். கடந்த வாரம் கரூரில் விஜய் கலந்துகொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சுத் திணறி பலி ஆனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வைரலான வீடியோ
கரூரில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷை உடனடியாக ஸ்பாட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து கரூர் சென்ற அன்பில் மகேஷ், அங்கு மருத்துவமனை வாசலில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதுகுறித்த வீடியோ காட்சியும் வெளியாகி வைரலானது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிப்பதாக விமர்சித்தார்கள். அன்புணி ராமதாஸ் கூட அன்பில் மகேஷுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என கிண்டலடித்து இருந்தார்.
சீரியலில் நடித்துள்ள அன்பில் மகேஷ்
இப்படி அன்பில் மகேஷ் நடிக்கிறார் என பலரும் கூறி வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரும் முன் நடிகராக ஒரு சீரியலில் நடித்த தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் நடித்த சீரியலின் பெயர் அகல்யா. கடந்த 2004-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நல்ல முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்பில் மகேஷ். அந்த சீரியலில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகிறார்கள்.