MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : குட் நியூஸ் சொல்ல வந்த முத்துவுக்கு முட்டுக்கட்டை போட்ட சிந்தாமணி... சிக்கலில் சிக்கிய சீதா

Siragadikka Aasai : குட் நியூஸ் சொல்ல வந்த முத்துவுக்கு முட்டுக்கட்டை போட்ட சிந்தாமணி... சிக்கலில் சிக்கிய சீதா

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும் சீதாவும் மீனாவின் அம்மாவை சந்திக்க சென்ற நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 12 2026, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து - மீனா வாழ்க்கையில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மீனா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது அம்மாவிடம் தெரிவிக்க முத்து எடுக்கும் முயற்சி, எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், முத்துவுடன் சீதா பைக்கில் செல்வதைப் பார்த்த அருண் கடும் கோபமடைகிறார். இதனால் கதையில் மீண்டும் புதிய பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சீதாவை அழைத்துக்கொண்டு கிளம்பிய முத்து!
Image Credit : jiohotstar

சீதாவை அழைத்துக்கொண்டு கிளம்பிய முத்து!

மீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவரது அம்மாவிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று முத்து முடிவு செய்கிறார். இதற்காக சீதா பணிபுரியும் மருத்துவமனைக்குச் செல்லும் அவர், அங்கிருந்து சீதாவைத் தனது பைக்கில் அழைத்துக்கொண்டு புறப்படுகிறார். மீனாவின் அம்மாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருவரும் சென்றுகொண்டிருக்கும்போது, வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெறுகிறது.

35
முத்து - சீதாவைப் பார்த்து கடுப்பான அருண்!
Image Credit : jiohotstar

முத்து - சீதாவைப் பார்த்து கடுப்பான அருண்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அருண் மீண்டும் கதையில் தோன்றுகிறார். சாலையில் போக்குவரத்து போலீசாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருக்கும் அருண், அந்த வழியாக முத்துவும் சீதாவும் ஒரே பைக்கில் செல்வதைக் கவனிக்கிறார். அப்போது அங்கிருக்கும் ஒருவர், காதலர்கள் மட்டும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஜாலியாகச் செல்கிறார்கள்; ஆனால் தன்னை நிறுத்தி ஹெல்மெட் குறித்து விசாரிப்பதாக அருணிடம் கூறுகிறார். ஏற்கெனவே சீதா மீது கோபத்தில் இருக்கும் அருணுக்கு, முத்துவுடன் அவர் பைக்கில் செல்வதைப் பார்த்ததும் ஆத்திரம் அதிகரிக்கிறது. இருப்பினும், இருவரும் அங்கிருந்து கிளம்பிவிடுகின்றனர்.

45
மீனாவின் அம்மாவைப் பார்க்க விடாமல் தடுத்த சிந்தாமணி!
Image Credit : jiohotstar

மீனாவின் அம்மாவைப் பார்க்க விடாமல் தடுத்த சிந்தாமணி!

இதையடுத்து சீதாவை அழைத்துக்கொண்டு மீனாவின் அம்மா இருக்கும் வீட்டிற்கு முத்து செல்கிறார். ஆனால், அங்கு சென்றதும் அவர்களுக்கு புதிய சிக்கல் காத்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருக்கும் வாட்ச்மேன், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார். பின்னர் வீட்டிற்குத் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் வீட்டிற்குள் மீனாவின் அம்மாவுடன் சிந்தாமணியும் இருக்கிறார். முத்துவும் சீதாவும் வந்திருப்பதை அறிந்த சிந்தாமணி, அவர்களை உள்ளே அனுமதிக்க விரும்பவில்லை. இதனால், வீட்டில் யாரும் இல்லை என்றும், அனைவரும் வெளியூருக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்லும்படி வாட்ச்மேனிடம் தெரிவிக்கிறார்.

55
சிந்தாமணியின் திட்டத்தால் சந்தேகமடைந்த முத்து!
Image Credit : jiohotstar

சிந்தாமணியின் திட்டத்தால் சந்தேகமடைந்த முத்து!

சிந்தாமணி சொன்னபடியே வெளியே வரும் வாட்ச்மேன், வீட்டில் யாரும் இல்லை என்றும் வீடு பூட்டப்பட்டிருப்பதாகவும் முத்துவிடம் பொய் கூறுகிறார். ஆனால், அவர் கூறும் பதில் முத்துவுக்கு நம்பும்படியாக இல்லை. வீட்டிற்குள் ஆட்கள் இருந்துகொண்டே தங்களைச் சந்திக்க மறுக்கிறார்களோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால் அவரது சந்தேகம் மேலும் வலுக்கிறது. மீனா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியைச் சொல்ல வந்த இடத்தில் இப்படியொரு தடையை முத்து சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மீனாவின் அம்மாவை முத்துவும் சீதாவும் சந்திக்கவிடாமல் சிந்தாமணி தடுத்திருப்பது கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் மூலம் சிந்தாமணியின் பொய் வெளிச்சத்திற்கு வருமா? மீனா கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவரது அம்மாவுக்குத் தெரியவருமா? முத்துவுடன் சீதா சென்றதைப் பார்த்த அருண் மீண்டும் ஏதாவது பிரச்சினையை உருவாக்குவாரா? என்பதுதான் அடுத்தடுத்த எபிசோடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!
Recommended image2
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image3
TV Serials : அதிக நாட்கள் ஓடிய டாப் 10 தமிழ் சீரியல்கள்! 8 வருஷம் ஓடுன அந்த சீரியல் பத்தி தெரியுமா?
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : விஜயாவை டார்ச்சர் பண்ணும் பாட்டி... அண்ணாமலையின் உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும் முத்து - மீனா
Recommended image2
Siragadikka Aasai Salary : சிறகடிக்க ஆசை சீரியலில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved