- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஐயோ, கார் விபத்தில் சிக்கிய ரேவதி – மனைவியை காணாமல் தவிக்கும் கார்த்திக்; நிஜமான சித்தர் வாக்கு; கார்த்திகை தீபம்; கண்ணீரில் ரசிகர்கள்!
ஐயோ, கார் விபத்தில் சிக்கிய ரேவதி – மனைவியை காணாமல் தவிக்கும் கார்த்திக்; நிஜமான சித்தர் வாக்கு; கார்த்திகை தீபம்; கண்ணீரில் ரசிகர்கள்!
Karthigai Deepam Serial Today 1160th Episode: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1160ஆவது எபிசோடில் கல்யாண நாளுக்காக கார்த்திக்கிற்கு பைக் கிஃப்ட் வாங்க சென்ற ரேவதி கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

Karthigai Deepam Serial Today 1160th Episode
கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு ரேவதி தனது கணவருக்கு புதிதாக பைக் வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். மேலும், புதிதாக பைக்கும் புக் செய்தார். கார் வாங்கி கொடுக்க ஆசை இல்லை. ஏனென்றால், எப்போதும் கார் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதனால், பைக் வாங்கி தர எண்ணி புக் செய்தார்.
கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்
இதே போன்று கார்த்திக்கும் ரேவதிக்கு விலையுயர்ந்த வீடு ஒன்றை பரிசாக கொடுக்க திட்டமிட்டுள்ளார். இடம் வாங்கி, அந்த இடத்தில் புதிதாக பிரம்மாண்டமான வீடும் கட்டியிருக்கிறார். இந்த நிலையில் தான் ரேவதியை கொலை செய்ய அவரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முருகன் ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக 2 முறை முயற்சி செய்தும் பலனில்லை. பிறகு முருகனின் பாஸ் கொடுத்த ஐடியாவால் காரை ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டார்.
கார்த்திகை தீபம் ரேவதி கார் விபத்து அப்டேட்
இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1160ஆவது எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியானது. இதில், திருமண நாளை முன்னிட்டு ரோகிணியிடம் சொல்லிவிட்டு புதிதாக புக் செய்திருந்த பைக் மாடல் வந்துவிட்டதாகவும், அதனை பார்க்க வருமாறும், பைக் ஷோரூமிலிருந்து மேனேஜர் வர சொல்லவே ரேவதியும் பைக் ஷோரூமிற்கு சென்றார். பிறகு தனது கணவருக்காக ஆசை ஆசையாக புக் செய்திருந்த புல்லட் பைக்கை தொட்டு தடவி பார்த்தார். இதைத் தொடர்ந்து கணவருக்கு பைக் கிஃப்ட் கொடுக்க போகிறோம் என்ற ஆசையோடு வெளியில் வந்த ரேவதி மீது முருகன் காரை ஏற்றினார்.
ஒரே ஒரு பெயர்... ஓகோன்னு ஒரு வாழ்க்கை! நடிகைகளுக்கு பாரதிராஜா சூட்டிய ராசியான பெயர்களின் ரகசியம்!
Karthigai Deepam Karthik searching for Revathi
இதில் தூக்கி வீசப்பட்ட ரேவதி தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இது ஒரு புறம் இருக்க, ரேவதியை காணாமல் துடித்த கார்த்திக் ரோகிணியிடம் இதைப் பற்றி விசாரிக்க, அவரும் உங்களுக்காகத்தான் பைக் வாங்க சென்றிருப்பதாக கூறினார். ரேவதி ரத்த வெள்ளத்தில் கிடக்க, ரேவதியை காணாமல் தவிக்கும் கார்த்திக் எப்படி அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தெரிந்து கொள்ள போகிறார்? அதன் பிறகு சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது பற்றியும், கார்த்திக்கின் மனநிலை பற்றியும் கார்த்திகை தீபம் சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.